- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் 2வது திருமணம் செய்ய அதுதான் காரணம்… நடிகை சமந்தா ஓபன்டாக்!

நான் 2வது திருமணம் செய்ய அதுதான் காரணம்… நடிகை சமந்தா ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் அபரிமிதமான வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா. தமிழில் தெறி தங்கமகன் அஞ்சான் 10 எண்றதுக்குள்ள நான் ஈ யு டர்ன் நீதானே என் பொன் வசந்தம் நடிகையர் திலகம் சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் சில படங்களில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து சமந்தா நடித்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. நடிகர் நாகர்ஜூனாவின் மகன்தான் நாக சைதன்யா. இவரது மனைவி நடிகை அமலா. சமீபத்தில் கூலி குபேரா படங்களில் நாகர்ஜூனா நடித்திருந்தார்.

- Advertisement -

நாக சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்த நிலையில் கடந்த 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நடிகை சமந்தா 2021ல் நாக சைதன்யா விட்டு பிரிந்தார். சட்டப்படி இருவரும் விவாகரத்தும் பெற்று விட்டனர். கடந்தாண்டு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

இதற்கிடையே நான் 2வது திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி வந்த நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் நிடிமூரை காதலிப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இதை உறுதிபடுத்தும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி கோவை ஈஷா மையத்தில் டைரக்டர் ராஜ் நெடிமூரை சமந்தா 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சமந்தா தனது 2வது திருமணம் குறித்து கூறியதாவது, விவாகரத்து என்ற நிலையை சந்தித்த போது இனி யாரையும் நம்பவோ நெருங்கி பழகவே முடியாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அன்பையும் நட்பையும் ஏற்றுக் கொண்ட போதுதான் என்னை நானே மீண்டும் கண்டுகொண்டேன்.

இன்று நான் ஒரு மேம்பட்ட நபராக இருப்பதற்கு காரணம் ராஜ் நெடிமூர் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் சுதந்திரமாக சுவாசிப்பதாக என் தோழி கூறியது என் மனதை மிகவும் தொட்டது. இனி நான் யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் கணவரின் அன்பும் காதலும் எனக்கு போதும் என்று நடிகை சமந்தா அதில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்