- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த ஆட்சியிலும் நீட் தேர்வு இருந்தது, அப்போது இயக்குனர் அமீர் கோமாவில் இருந்தாரா? - விஜய்...

கடந்த ஆட்சியிலும் நீட் தேர்வு இருந்தது, அப்போது இயக்குனர் அமீர் கோமாவில் இருந்தாரா? – விஜய் பட இயக்குனர் ஆவேசம்!

- Advertisement -

சமீபத்தில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இயக்குனர்கள் பா ரஞ்சித் வெற்றிமாறன் அமீர் லெனின் பாரதி நடிகர்கள் மன்சூர் அலிகான் கலையரசன் நடிகைகள் ஆண்ட்ரியா ரேவதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய இயக்குனர் அமீர், தவெக ஆட்சி குறித்து விமர்சித்து பேசினார். இதுகுறித்து விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு கூறியிருப்பதாவது, நீட் எதிர்ப்பு போராட்டம் டெல்லி ஆகட்டும் தமிழ்நாடு ஆகட்டும் இது முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டமாக தெரியவில்லை.

- Advertisement -

தமிழகத்தில் காலம் காலமாக யார் பாரதிய ஜனதாவை எதிர்த்து கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள்தான் முன்னின்று போராட்டம் நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட எந்த ஒரு மாணவனின் குரலாக இந்த போராட்டம் இல்லை. போராட்டத்தில் சாதிதான் பேசப்படவில்லை. மாணவர்கள் பிரச்சனை பேசப்படுகிறது. தகுதி அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர் பணிக்கு துறைமுகம் ரயில்வே போன்று ஒவ்வொரு பணிக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. அதுபோல் உயிரை காக்கக்கூடிய மருத்துவத்துறைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு தகுதியானவர்கள் வந்தாக வேண்டும். இதற்கு முன்பு மருத்துவக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு இடம் இருக்கா? பணம் கொடுப்பவர்கள் தான் இடம்.

- Advertisement -

நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் நுழைந்து ஏழை மாணவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடக் கூடாது என்பதுதான் என் வேண்டுகோள். நீட் வினாத்தாள் வெளியானது தவறு தான். அந்த விஷயத்தை வெளியிட்டு நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தது மட்டுமின்றி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கையும் மத்திய அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆட்சியின் போதே நீட் தேர்வு இருந்தது. இப்போது ஆட்சி மாறியதும் எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்குனர் அமீர் அன்று கோமாவில் இருந்தாரா? மீண்டும் நீட் தேர்வு நடத்தும்போது தேர்வில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும். எனவே நீட் எதிர்ப்பு போராட்டம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கும் எதிரான போராட்டம். இது நீட்டுக்கு எதிரானது அல்ல. நாட்டுக்கு எதிரானது என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்