- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவி சீரியல் பார்க்கும் பெண்கள் திடீரென அப்படி மாறினால்…? நடிகை சமந்தா தயாரித்த முதல் தெலுங்கு...

டிவி சீரியல் பார்க்கும் பெண்கள் திடீரென அப்படி மாறினால்…? நடிகை சமந்தா தயாரித்த முதல் தெலுங்கு படம் – ஆரம்பமே அசத்தலா இருக்குதே…

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் இந்தியில் அவர் நடித்த சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் வெளியாகி பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. மீண்டும் ஒரு இந்தி வெப் சீரிஸில் நடிக்க சமந்தா கமிட் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்றவர் சமந்தா. தமிழில் அவர் நடித்த கத்தி தெறி பாணா காத்தாடி அஞ்சான் நடிகையர் திலகம் தங்கமகன் 10 எண்றதுக்குள்ள விண்ணைத்தாண்டி வருவாயா நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் சமந்தாவுக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.

- Advertisement -

இந்நிலையில் நடிகை சமந்தா தயாரிப்பாளராக சினிமாவில் களத்தில் இறங்கி இருக்கிறார், டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடிகை சமந்தா தொடங்கியுள்ளார். முதல் படமாக சுபம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ஒரு காமெடி படமாக உருவாகியுள்ளது. வருகிற மே 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

நண்பர்கள் சிலர் அடுத்தடுத்து திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களது மனைவிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சீரியலை டிவியில் பார்த்த பிறகு அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழந்து பேய் பிடித்தது போல் நடந்து கொள்கின்றனர். கணவர்கள் இதனால் பயந்து அரண்டு போகின்றனர். ஒட்டுமொத்தமாக ஒரு ஊரில் உள்ள பெண்கள் அனைவருமே இப்படி நடந்து கொள்கிறார்கள்.

- Advertisement -

இப்படிப்பட்ட காட்சிகளுடன் நகைச்சுவையாக சுபம் படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது. சுபம் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தையே மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான கதையை தேர்வு செய்து சமந்தா தயாரித்திருப்பது கவனிக்கத்தக்கது.

சுபம் படத்தின் கதையை வசந்த் மரிகாண்டி என்பவர் எழுதியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு பண்டி என்ற திரைப்படத்தை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹர்சித், ஸிரியா, சரண், ஷாலினி கவிரடி சீனிவாஸ் மற்றும் ஷ்ரவாணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களுக்கு பெரிய காமெடி விருந்தாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்