- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சியான் விக்ரம் செய்த அந்த விஷயம், என்னால எப்பவும் மறக்கவே முடியாது...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சியான் விக்ரம் செய்த அந்த விஷயம், என்னால எப்பவும் மறக்கவே முடியாது – பிரபல நடிகை ஓபன் ஸ்டேட்மென்ட்

- Advertisement -

நடிகர் சியான் விக்ரம் மிக நல்ல நடிகராக சிறப்பான நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்து வருகிறார். முதலில் நடிக்க பட வாய்ப்புகளின்றி சிரமப்பட்ட அவர், கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். அதன்பிறகு டைரக்டர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.

விக்ரம் நடித்த சாமி படம் அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து அந்நியன் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. காசி படத்தில் பார்வையற்றவராக விக்ரம் நடிப்பு பலரையும் திகைப்படைய வைத்தது. இதில் கண்ணின் கருவிழிகள் தெரியாத வகையில் நடித்ததற்காக, ஒரு கட்டத்தில் பார்வையே பறிபோய்விடும் சூழல் ஏற்பட்டும், டாக்டர்கள் எச்சரித்தும் அதே நிலையில் தொடர்ந்து நடித்திருக்கிறார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது சியான் விக்ரம் நடிப்பில் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கும் படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம், அதிக விருதுகளை பெறும் என்று கூறப்படுகிறது. தங்க வயல் சுரங்கத்தில் வாழ்ந்த கொத்தடிமை மக்களை பற்றிய கதை தான் இது. மிகவும் இயல்பான முறையில், எடுக்கப்பட்ட இந்த படத்தில் சியான் விக்ரமுக்கு வசனங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இயக்குநர் சுசிகணேஷ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த படம் கந்தசாமி. இந்த படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருப்பார் சியான் விக்ரம். அவரது வெற்றிப் படங்களில் இந்த படமும் மிக முக்கியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா சரண். இந்த படத்தில் தேங்காய் கடை தேனப்பன் கேரக்டரில் வடிவேலு காமெடி காட்சிகள் படத்துக்கு மேலும் பெரிய ஆதரவாக இருந்தது.

- Advertisement -

நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அப்போது அவர், நான் ஆரம்பத்தில் படங்களில் நடித்த போது நிறைய பிரச்னைகளை சந்தித்தேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் இருந்து ஓடிப்போய் விடுவேன். அப்போது இனி என்னால் நடிக்கவே முடியாது என்றும் கூறியிருக்கிறேன்.

கந்தசாமி படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். அந்த படத்தில் நடித்த போது நிறைய முறை டேக் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். ஒரே காட்சிக்காக திரும்ப திரும்ப டேக் எடுத்தார்கள். ஆனால் ஹீரோ விக்ரம் என்னோடு பொறுமையாக நடித்தார். அதை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது, என்று அந்த நேர்காணலில் ஸ்ரேயா சரண் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்