- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் சொந்தமாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்திய நடிகை ஸ்ருதிஹாசன் - ஆனால் அந்த விவிஐபி...

சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்திய நடிகை ஸ்ருதிஹாசன் – ஆனால் அந்த விவிஐபி எங்கே காணாமே என புலம்பிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இளைய மகள் அக்சரா ஹாசன். இருவருமே திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இதில் ஸ்ருதிஹாசன் திரைப்பட நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழை காட்டிலும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதற்காக மும்பையில் அவர் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் அப்பா கமல்ஹாசனின் வீடு உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், எனக்கு என்று சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை. மும்பையிலும் ஹைதராபாத்திலும் வாடகை வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன் என்று வருத்தமாக கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் சென்னையில் தனக்காக தனியாக சொந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

இந்த புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கிரஹப்பிரவேசத்தை மிகவும் ஆடம்பரமாக செய்யாமல் முழுக்க முழுக்க தனது நெருங்கிய தோழிகளை மட்டுமே அழைத்து மிகவும் எளிதாக ஸ்ருதிஹாசன் நடத்தி முடித்திருக்கிறார். அந்த கிரஹப்பிரவேசம் தொடர்பான புகைப்படங்கள் ஸ்ருதிஹாசனின் தோழி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

அதில் சொந்த மண்ணுக்கு ஸ்ருதிஹாசன் திரும்பி வந்துட்டாங்க. சென்னையில் புது வீடு வாங்கியதற்கு வாழ்த்துகள் ஸ்ருதிஹாசன் என்றும் அவர் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அவரது இந்த வாழ்த்துக்கு ஸ்ருதிஹாசன் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அந்த பதிவை ரீ போஸ்ட் செய்துள்ளார். மேலும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.

அவை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும் புதிய வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்துள்ள நடிகை ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் அந்த கிரஹப்பிரவேச புகைப்படங்களில் அவரது அப்பா கமல்ஹாசனை காணவில்லையே என்றும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வரும் விருப்பத்தில் ஸ்ருதிஹாசன் இருக்கிறார். அதனால்தான் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார். அவர் தமிழ் படங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்