- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா - தனுஷ் பயோபிக் படத்தை எடுக்கப் போவது இந்த இயக்குனர்தானாம்... ஒத்து வருமா என...

இளையராஜா – தனுஷ் பயோபிக் படத்தை எடுக்கப் போவது இந்த இயக்குனர்தானாம்… ஒத்து வருமா என ரசிகர்கள் குழப்பம்…

- Advertisement -

நடிகர் தனுசுக்கு கடந்த ஆண்டு வாத்தி திரைப்படம் மட்டுமே வெளியானது. இதன் மூலம் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் தனது 50-வது திரைப்படத்தை இயக்கி நடிப்பதாக அறிவித்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்திப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு இரண்டாவது நேரடி தெலுங்கு திரைப்படமாக இது உருவாகிறது. சேகர் கமுலா இயக்கும் இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படியான சூழலில், தனுசுக்கு அடுத்தடுத்த திரைப்படங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. கடந்த பொங்கல் அன்று அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. இதனை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். அவரது உழைப்பு மிகவும் பிடித்துப் போனதால் தனது அடுத்த படத்தையும் அவரே இயக்குவார் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முந்தைய பாகம் மற்றும் அடுத்த பாகம் எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் அவர் நிச்சயமாக கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இருப்பார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் படம் கிடைத்த கலவையான விமர்சனத்தால் அந்த முடிவை தனுஷ் கைவிட்டு இருக்கிறாராம்.

அதற்கு பதில் வேறொரு படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கச் செய்ய தனுஷ் திட்டமிட்டு உள்ளாராம். தற்போது தனது 51வது படத்தை முடித்துவிட்டு அவர் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் துப்பாக்கி சத்தம் குண்டு சத்தத்திற்கு பெயர் போன இயக்குனர் எப்படி சாந்தமான ஒரு கதையை இருப்பார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்