- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை என் வாழ்க்கையில் வந்த 6 பேர், இப்போது அதற்காக மட்டுமே நேரத்தை ஒதுக்குகிறேன் -...

இதுவரை என் வாழ்க்கையில் வந்த 6 பேர், இப்போது அதற்காக மட்டுமே நேரத்தை ஒதுக்குகிறேன் – வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் வாணி கணபதியை என்ற நடன கலைஞரை திருமணம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகி, குஜராத்தி நடிகையான சரிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். கமல் சரிகா தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் அக்சரா ஹாசன் என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்தவர் ஸ்ருதிஹாசனுக்கு 40 வயதுக்கு மேலான நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. திரைப்பட பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் அவர் இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு இந்தி படங்களில் ஸ்ருதிஹாசன் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல் கமலின் இளையமகள் அக்சரா ஹாசனும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

- Advertisement -

அதனால் நடிகை ஸ்ருதிஹாசனை சந்திக்கும் ரசிகர்கள், செய்தியாளர்கள் அவரிடம் எப்போது திருமணம் என்று ஒவ்வொரு முறையும் கேட்டு வருகின்றனர். அவர் ஏற்கனவே சில நடிகர்கள் சில நண்பர்களுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். மேலும் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பும் சிலருடன் வைத்திருந்தார்.

ஆனால் அவர்கள் யாரையுமே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் ஸ்ருதிஹாசனை விட்டு விலகிச் சென்று விட்டனர். நடிப்பிலும் இசையிலும் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவரது தந்தை கமல்ஹாசனும் மகள்களின் திருமணம் குறித்து எந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, இதுவரை நான் என் வாழ்க்கையில் ஆறு முறை காதலித்திருக்கிறேன். அது காயங்களாகவே முடிந்துவிட்டது. மேலும் மன வேதனையை எதிர்கொள்வதற்கு பதிலாக அமைதிக்கும் தனிமைக்கும் முன்னுரிமை அளிக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இப்போதைக்கு நான் தனியாக இருப்பதை ஏற்றுக்கொண்டு என் துணையிலேயே ஆறுதல் கண்டு குணமடையவும் சிந்திக்கவும் எனக்கு நானே நேரம் ஒதுக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது இனிமேல் முரட்டு சிங்கிள் வாழ்க்கையை தொடர இருப்பதை அவர் சூசகமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்