- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இதில் நடிக்கிறேன் என்றவுடன் ரசிகர்கள் அப்படி பேச துவங்கி விட்டார்கள் - கூலி...

நான் இதில் நடிக்கிறேன் என்றவுடன் ரசிகர்கள் அப்படி பேச துவங்கி விட்டார்கள் – கூலி படத்தில் ப்ரீத்தி கேரக்டர் குறித்த பேசிய ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பாடகியாக சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றவர். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து புலி பூஜை வேதாளம் 3 சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் முன்னணி நடிகையாக முன் வரிசைக்கு அவரால் வர முடியவில்லை.

எப்போதுமே தமிழ் சினிமாவில் பிற மொழிகளில் இருந்து வரும் நடிகைகளுக்கு கிடைக்கும் பேராதரவு தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மைதான். மலையாளம் கன்னடம் தெலுங்கு இந்தி நடிகைகளை கொண்டாடும் அளவுக்கு கோலிவுட் தமிழ்நாட்டு நடிகைகளை வளர விடுவது இல்லை.

- Advertisement -

அதனால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த கலைஞனாக அடையாளம் பெற்ற கமல்ஹாசனின் மகளாக இருந்தும் ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் தொடர் வாய்ப்புகளை பெற முடியவில்லை. அதனால் தெலுங்கில் நிறைய படங்களில் தாராள கவர்ச்சி காட்டி முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில், இனிமேல் என்ற இசை ஆல்பம் தயாரித்த ஸ்ருதிஹாசன், அதில் தனக்கு ஜோடியாக லோகேஷ் கனகராஜை நடிக்க வைத்தார். அதன் பலனாக இப்போது கூலி படத்தில் ஸ்ருதிஹாசனை சத்யராஜ் மகளாக அவர் நடிக்க செய்திருக்கிறார்.

- Advertisement -

வழக்கமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படுவது போல் காட்டுவது வழக்கமாக உள்ளது. அதனால் கூலி படத்திலும் ஸ்ருதிஹாசனின் கேரக்டரை கொன்று விடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், கூலி படத்தில் நான் கமிட் ஆனதுமே என்னுடைய கேரக்டர் கொலை செய்யப்பட்டு விடும் என்று ரசிகர்கள் கருத்து வெளியிட தொடங்கி விட்டார்கள்.

அத்துடன் இவர் சண்டைக்காட்சிகளில் நடிப்பாரா என்றும் கேட்டார்கள். ஆனால் இந்த படத்தில் நான் சண்டைக் காட்சியில் நடிக்கவில்லை. சத்யராஜ் மகளாக ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பல பெண்களின் கதாபாத்திரங்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் டெஸ்டோஸ்டிரான் நிறைந்த கூலி படத்தில் நான் ஒரு ஹெல்த்தியான ஈஸ்ட்ரோஜனாக இருப்பேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்