- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்போதுமே என் அம்மா கூடவே இருக்கிறார்… எப்படி நான் அதை செய்ய முடியும்? - ஆவேசமாக...

எப்போதுமே என் அம்மா கூடவே இருக்கிறார்… எப்படி நான் அதை செய்ய முடியும்? – ஆவேசமாக பொங்கிய நடிகை ஸ்ரீ லீலா!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஸ்ரீ லீலா. அதே போல் தமிழிலும் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதே போல் புஷ்பா 2 படத்திலும் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

நடிகை ஸ்ரீலீலாவுக்கு தெலுங்கிலும் தமிழிலும் தொடர்ந்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அத்துடன் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் திறமையான நடனக்கலைஞரான அவரது நடனத்துக்கு தமிழ் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கூட்டமே உள்ளது.

- Advertisement -

தெலுங்கிலும் தமிழிலும் அதிக கவனம் பெற்ற ஸ்ரீ லீலா, அடுத்ததாக இந்தியிலும் தனது காலடியை எடுத்து வைத்திருக்கிறார். இந்தியிலும் அவருக்கு பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கிடையே இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் என்பவருடன் ஸ்ரீ லீலா காதல் வயப்பட்டு இருப்பதாகவும் அவருடன் அடிக்கடி இரவு நேரங்களில் டேட்டிங் செல்வதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

மேலும் விரைவில் நடிகை ஸ்ரீ லீலா திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார். காதல் வாழ்க்கையை விட திருமண வாழ்க்கையை தான் அவர் அதிகமாக விரும்புகிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். பொதுவாகவே வளரும் இளம் நடிகைகள் குறித்து இதுபோன்ற தகவல்கள் வெளியாவது சில நேரங்களில் உண்மையாகவும் இருந்து விடுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விஷயங்களுக்கு நடிகை ஸ்ரீ லீலா விளக்கம் தந்திருக்கிறார். தனது காதல் மற்றும் திருமணம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் காதலில் இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். நான் காதலிப்பதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னுடைய அம்மா எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார்.

அம்மா கூடவே இருப்பதால் நான் எப்படி காதலில் விழ முடியும்? எனக்கு இப்போதுதான் 23 வயது ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை என்று நடிகை ஸ்ரீ லீலா வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதன்மூலம் தனது காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளுக்கு நடிகை ஸ்ரீ லீலா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்