- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அதிக படங்களில் நடிக்காதது ஏன்? அதை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் -...

நான் அதிக படங்களில் நடிக்காதது ஏன்? அதை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் – ஆடுகளம் பட நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

- Advertisement -

இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உள்ளவர் டாப்ஸி. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் நடித்தவர் டாப்ஸி. இந்த படம் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. நடிகை ஆண்ட்ரியா, இந்த படத்தில் டாப்ஸிக்கு பின்னணி குரல் தந்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.

தொடர்ந்து தமிழில் ஆரம்பம் வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை டாப்ஸி தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட இந்தியில் வெளியாகவில்லை. இந்த ஆண்டு அஷ்ஷி என்கிற ஒரு படம் மட்டுமே டாப்ஸி நடிப்பில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இப்படி டாப்ஸி நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனதற்கான காரணம் குறித்து நடிகை டாப்ஸி சமீபத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்த அவரது வித்தியாசமான பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாறுபட்ட ஒரு கோணத்தில் அவரது சிந்தனை இதில் வெளிப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை டாப்ஸி கூறியதாவது, எவ்வளவு வெற்றி தான் போதுமானது? இந்த கேள்வியை நான் ஒவ்வொரு நாளும் என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு ஓடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த பயணத்தில் நான் என்னை முழுமையாக ரசிக்க தவறி விட்டேன்.

- Advertisement -

மைல்கற்களைத் தாண்டி செல்வதில் மட்டும் அர்த்தம் இல்லை. அந்த பயணத்தின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ வேண்டும். என்னுடைய பயணத்தை நான் முழுமையாக ரசிக்க தவறிவிட்டேன். மற்றவர்களை திருப்திப்படுத்தவோ அல்லது நான்தான் சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கவோ நான் இந்த ஓட்டத்தில் ஓடவில்லை.

லட்சியம் என்பது நம்மை வளர்க்க உதவ வேண்டுமே தவிர நமது மன அமைதியை பறித்து விடக்கூடாது என்று நடிகர் டாப்ஸி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் காரணமாகவே அவரது நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இப்படி பட வாய்ப்புகளை தவிர்த்தால் எதிர்காலத்தில் டாப்ஸி காணாமல் போய்விடுவார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்