- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் கிங் 100 படத்தில் அந்த ரோலில் நடிக்கிறாரா நடிகை தபு? இது...

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் கிங் 100 படத்தில் அந்த ரோலில் நடிக்கிறாரா நடிகை தபு? இது உண்மைதானா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நாகார்ஜூனா. இவர் தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் குபேரா கூலி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதனால் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அவர் பரிச்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். அகில் அக்கினேனியின் லெனின் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

அப்போது நடிகர் நாகார்ஜூனா தனது திரையுலக பயணத்தின் மைல் கல் அவரது 100வது படம் கிங் 100 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 10ம் தேதிக்கு பிறகு வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், தெலுங்கு சினிமாத்துறையில் எழுந்துள்ள புதிய தகவல்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய தகவலின்படி நடிகை தபு இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குறிப்பாக அவர் வில்லி கேரக்டரில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. நடிகர் நாகார்ஜூனாவுக்கு எதிராக முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த ஜோடி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து நடித்திருந்தது.

இப்போது மீண்டும் நாகர்ஜூனா தபு இருவரும் ஜோடியாக இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ரா கார்த்தி இயக்கும் கிங் 100 படம், ஏழையாக இருந்து பெரும் பணக்காரர் ஆகும், வாழ்க்கையில் உயர்வடையும் ஒரு மனிதனின் கதையை அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிய வருகிறது.

- Advertisement -

இதில் தந்தை மகள் இடையேயான உணர்வுபூர்வமான கதை பின்னணி வலுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் நாகார்ஜூனா மற்றும் நடிகை தபுவுடன் இணைந்து நடிகை சுஷ்மிதா பட் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். வரும் 10ம் தேதிக்கு பிறகு படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் நாயகன் நடிகர் நாகார்ஜூனா உறுதியாக கூறியுள்ளார்.

நடிகை தபுவின் கதாபாத்திரம் குறித்த இந்த தகவல் 100 சதவீதம் உண்மையா என்பதை அறிய ரசிகர்கள் இப்போது ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகை தபு நடிகர் நாகார்ஜூனா பல படங்களில் காதலர்களாக நடித்த நிலையில் இந்தப் படத்தில் நாகார்ஜூனாவுக்கு வில்லி கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் தபு நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. எனினும் அதுவும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்