- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கட்சி தவெக வை நம்பினேன், தெரு தெருவா போய் பிரசாரமும் செய்தேன், இப்போது நடுத்தெருவில்...

விஜய் கட்சி தவெக வை நம்பினேன், தெரு தெருவா போய் பிரசாரமும் செய்தேன், இப்போது நடுத்தெருவில் நிற்கிறேன் – கண்ணீர் விட்டு கதறி அழுத பிக்பாஸ் நடிகை!

- Advertisement -

விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரைச்செல்வி. இவர் ஒரு நாடகக் கலைஞர். சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறி சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இப்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அருகில் உள்ள திருச்செங்கோட்டில் எக்ஸ்போ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்ட தாமரைச் செல்வி, டிவிகே கட்சியை நம்பி இன்னைக்கு தெருவில் நிற்கிறேன் என்று ஆதங்கத்தை கொட்டி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் தாமரைச் செல்வி கூறியிருப்பதாவது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜூக்கு தான் இந்த வீடியோ.

- Advertisement -

உங்களையும் உங்க ஊரையும் நம்பித்தான் நாங்கள் நிகழ்ச்சி நடத்த வந்தோம். நானும் டிவிகே கட்சியை சேர்ந்தவள் தான். உங்களுக்காக பிரச்சாரமும் பண்ணி இருக்கிறேன். தூங்கிட்டு இருக்கிறவங்களை கூட எழுப்பி அருண்ராஜ் ரொம்ப நல்லவர். அவருக்கு ஓட்டு போட்டா மக்களுக்கு நல்லது பண்ணுவார் என்று நம்பி ஓட்டு கேட்டேன்.

திருச்செங்கோடு திருமண மண்டபத்தில் எக்ஸ்போ நடத்துவதற்காக ஏற்பாடுகளை செய்தேன். ஆனால் உள்ளூர் பெரிய கடைக்காரர்கள் கொடுத்த புகாரால் போலீஸ் அனுமதி தரவில்லை. காவல்துறையின் தடையை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று எக்ஸ்போ நடத்த அனுமதியும் பெற்றோம். ஆனால் நீங்கள் அனுமதி கொடுக்கவில்லை.

- Advertisement -

உங்களை சுற்றி இருக்கிற பிஏ முதற்கொண்டு எல்லார்கிட்டயும் ஒரு மாசமா அலைஞ்சோம். ஆனால் நீங்க எங்களை பார்க்காமலே எக்ஸ்போவை கேன்சல் பண்ணிட்டீங்க. 22 ஆண்டுகளாக தெருக்கூத்து கலைஞராக இருந்து கஷ்டப்பட்டு முன்னேறி இந்த இடத்துக்கு நான் வந்திருக்கேன். என்னை மாதிரி எத்தனையோ ஏழைப் பெண்கள் 2000 3000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கிட்டு வந்து இந்த எக்ஸ்போவுல வியாபாரம் பண்ண நினைச்சாங்க. அது நடக்கலே.

பெரிய கடைகள் வைத்திருக்கிறவர்கள் தான் நல்லா வளர வேண்டும். கீழ் நிலையில் இருக்கிறவங்களை ஏன் நசுக்குறீங்க? நீங்க ஒரு ஊருக்கு மட்டும் அமைச்சரா? தமிழ்நாட்டுக்கே அமைச்சர் தானே? ஒருமுறை எங்களை பார்க்க கூட நேரமில்லையா? விஜய் ஜெயிக்கணும்னு நினைச்சு ஓட்டு போட்டோம். அவர் ஜெயிக்க வேண்டும் என தெருத்தெருவாக சென்று ஓட்டு கேட்டேன். கடைசியில் எங்களை இப்படி தெருவுல நிறுத்திட்டீங்களே என்று அந்த வீடியோவில் அழுது கொண்டே நடிகை தாமரைச் செல்வி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்