- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு சினிமா டைரக்டருக்கு சட்டசபைன்னு கூட பேர் தெரியாதா? படவிழாவில் பில்டப் ஆக பேசிய அட்லி...

ஒரு சினிமா டைரக்டருக்கு சட்டசபைன்னு கூட பேர் தெரியாதா? படவிழாவில் பில்டப் ஆக பேசிய அட்லி – அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இவரு என கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு ராஜா ராணி படம் மூலம் இயக்குனரானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார். அந்த படமும் பெரிய வசூலை குவித்த நிலையில் இப்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் ராக்கா என்ற படத்தை அட்லி டைரக்ட் செய்திருக்கிறார்.

வழக்கமாக அட்லி இயக்கும் படங்கள் எல்லாமே பழைய படங்களில் இருந்து சுடப்பட்ட கதையாகவும் பல படங்களில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளாகவும் தான் இருக்கும். பழைய படங்களை காப்பியடித்து படம் எடுப்பதில் முதலிடம் பிடிப்பவர் எப்போதுமே அட்லிதான். ஆனால் மேடையில் பேசும் போது பெரிய அறிவுஜீவியாக மேதாவியாக அவரை காட்டிக்கொள்வது வழக்கம்.

- Advertisement -

அப்படிதான் நேற்று நடந்த பத்தா பட விழாவிலும் இயக்குனர் அட்லியின் ஆடிட்யூட் காணப்பட்டது. விஜய் அண்ணா இல்லை என்றால் நான் இல்லை. நான் இப்போது போட்டிருக்கும் பேண்ட் சட்டை கூட அவர் கொடுத்த வாய்ப்பால் கிடைத்தது தான் என்று வழக்கம் போல விஜய் புகழை நேற்றும் பாடினார். மேலும் விஜய் சேதுபதி பேசிய லீடர்ஷிப் என்றால் என்ன என்பதையும் மறைமுகமாக அவர் குத்திக்காட்டி பேசினார்.

தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி பேசுகையில், ஊர் வாயை அடக்க முடியாது. ஆனால் ஊர் வாயில் விழுந்துட்டு நாம நம்பி வாழ்ந்துட்டு போறது முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும். அதனால் எவன் என்ன சொல்றான்னு கேட்காத. நீ ஊருக்கு போகணுமா போயிட்டே இரு.

- Advertisement -

வாழ்க்கை நீ எங்க போகணுமோ அங்கு அழைத்துச் செல்லும். யார் பேச்சையும் கேட்காத. சின்ன பொறிகளில் மாட்டிக் கொள்ளாதீங்க. ஏன்னா நம்ம தான் அடுத்த தலைமுறை. இந்த சோசியல் மீடியாவுல அவரு அதைச் சொன்னாரு இவர் இதைச் சொன்னாருன்னு அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லனும்னா நேரா சொல்லிக்கலாம். அடுத்த தலைமுறை அரசியல் ஆர்வத்துக்கு ஒரே காரணம் விஜய் தான்.

முந்தைய தலைமுறையில் யாரும் சட்டசபையை பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு சட்டசபையில் என்ன நடக்குதுன்னு அஞ்சு வயசு குழந்தை கூட பார்க்குது என்று பேசினார். அப்போது அது என்னது தலைமைச் செயலகமா? அங்க கூட்டம் நடக்குமே? அது என்னது என்ன சொல்வாங்க சட்டசபை. அந்த சட்டசபையில் வந்து அஞ்சு வயசு குழந்தை கூட பார்த்தது என்று சட்டசபை என்றால் என்னவென்றே தெரியாதவர் போல பேசினார். சார் பெரிய அப்பாடக்கரு, சட்டசபைன்னு கூட அவர் பேர் தெரியாதா? என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்