இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த 5ம் தேதி ரிலீஸ் ஆன இந்த படம் முதல் நாளில் மட்டுமே ரூ. 18 கோடி வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இதுவரை 4 நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூலை 46 கோடி ரூபாய்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கமல் மணிரத்னம் நாயகன் படத்துக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து இணைந்த நிலையில் மீண்டும் ஒரு சரித்திர படமாக தக்லைஃப் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் பிளாப் ஆகி விட்டது. ஒரு சராசரியான சுமாரான படமாக கூட இல்லாமல், இந்தியன் 2 வரிசையில் கமலுக்கு இந்த படமும் அமைந்து விட்டது.
தக்லைஃப் படம் மோசமான படம் என்ற விமர்சனத்தை பெற்ற அதே வேளையில், இந்த படத்தில் இடைவேளை வரை கமலுக்கு லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் நெருக்கமான தோழியாகவும், அதன்பிறகு சிம்புவுக்கு காதலியாகவும் பிற்பாதியில் திரிஷா நடித்திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரிஷாவை, உயிர் உங்களுடையது தேவி என கார்த்தி பேசிய டயலாக்கை ரசிகர்கள் திரிஷாவின் வலைதள பக்கங்களில் கூறி வந்தனர். இப்போது தக்லைஃப் படத்தை பார்த்துவிட்டு இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பது அவசியம்தானா, இப்படி நடிப்பதும் தேவையா என்றும் கேள்வி கேட்டு விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெரிய அளவில் விவாதப் பொருளாகி விமர்சிக்கப்பட்ட நிலையில், நடிகை திரிஷா எந்த கேரக்டரில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்கிற உரிமை யாருக்கும் இல்லை. பிடித்தால் பாருங்க, பிடிக்கலேன்னா பார்க்காதீங்க என்று மூத்த நடிகர் எஸ்வி சேகர் தனது பதிவை செய்திருந்ததும் நேற்று இணையத்தில் வைரலானது.
இதற்கிடையே தனக்கு நெருக்கமானவர்களின் பேசிய நடிகை திரிஷா, புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகா விலைமாது கேரக்டரில்தான் நடித்திருந்தார். பிறகு ஹீரோ தனுஷை திருமணம் செய்துக்கொள்வார். அதே போல் வானம் படத்திலும் அனுஷ்கா விலை மாது கேரக்டரில்தான் நடித்திருந்தார். அவர்களை எல்லாம் சிறந்த நடிப்பு என பாராட்டினார்கள். ஆனால் நான் தக்லைஃப் படத்தில் நடித்த கேரக்டரை மட்டும் ஏன் எல்லோரும் குத்தம் சொல்கிறார்கள் என்று ஆவேசமாக கேட்டு ஆதங்கப்பட்டிருக்கிறார் திரிஷா. இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





