- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா இடத்துக்கு போராடி ஜெயித்து வந்த நடிகை திரிஷா, இடித்து நொறுக்கிய தக்லைஃப்… - கருப்புதான்...

நயன்தாரா இடத்துக்கு போராடி ஜெயித்து வந்த நடிகை திரிஷா, இடித்து நொறுக்கிய தக்லைஃப்… – கருப்புதான் என்னை காப்பாத்தணும் என காத்திருக்கும் குந்தவை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நீடித்து வருகிறார் நடிகை திரிஷா. வயது 40களை கடந்தும் இப்போதும் தமிழ் தெலுங்கு என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு அவரது இமேஜ் டாப் லெவலுக்கு போனது.

இந்த படத்தில் நடித்த திரிஷாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிந்தன. அதனால் லியோ விடாமுயற்சி குட்பேட் அக்லி தக்லைஃப் ஐடென்டி விஸ்வம்பரா என பல படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்தார். இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள கருப்பு படத்திலும் திரிஷா தான் நாயகியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு ரூ. 3 கோடியாக இருந்த திரிஷாவின் சம்பளம் ரூ. 6 கோடியாக அதிகரித்தது. பிறகு அது 8 கோடி ரூபாயாக உயர்ந்தது. இப்போது தக்லைஃப் படத்தில் இந்திராணி கேரக்டரில் நடிக்க திரிஷாவின் சம்பளம் ரூ. 12கோடி என்று சொல்லப்படுகிறது. அதனால் நயன்தாராவின் சம்பளத்தை திரிஷா எட்டி பிடித்துவிட்டதாக இணையத்தில் தகவல் வைரலானது.

ஏனெனில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். ஆனால் அதே நேரத்தில் இப்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு அவர் ஜோடியாக நடிக்கும் மெகா 157 படத்தில் நயன்தாரா சம்பளம் ரூ. 6 கோடி தான் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தொடர்ந்து நயன்தாரா தோல்வி படங்களை தந்ததால் வேறு வழியின்றி ரூ. 6 கோடி சம்பளத்துக்கு ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதனால் திரிஷா சம்பளம் ரூ. 12 கோடியாக உயர்ந்த நிலையில் நயன்தாரா இடத்தை பிடித்த சந்தோஷத்தில் திரிஷா இருந்தார். ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த தக்லைஃப் படத்தில் இந்திராணி என்ற கேரக்டரில் திரிஷாவை நடிக்க வைத்து, மொத்த இமேஜையும் காலி செய்துவிட்டனர்.

அதனால் நடிகை திரிஷா ஏகப்பட்ட அப்செட்டில் இருந்து வருகிறார். பொன்னியின் செல்வன் குந்தவை இமேஜ் என்னை தூக்கி நிறுத்தியது. அதே மணிரத்னம் தக்லைஃப் இந்திராணி கேரக்டர் மூலம் என் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கி விட்டார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள கருப்பு படம்தான் என் இமேஜை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு கருப்பு சாமிதான் துணை நிற்கணும் என்று திரிஷா புலம்பிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்