- Advertisement -
Homeபொழுதுபோக்குவலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட திரிஷா, சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும்போது திரிஷாவுக்கு இது...

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட திரிஷா, சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தவிக்கும்போது திரிஷாவுக்கு இது தேவையா? – குந்தவைக்கு நேரம் சரியில்லையோ

- Advertisement -

நடிகை திரிஷா, தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நாயகியாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்தும் திரிஷா போன்ற ஒரு சிலர்தான் கதாநாயகியாக மட்டுமே இன்னும் வலம் வருகின்றனர். அந்த காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்த பலர் அம்மா, அக்கா கேரக்டர்களில் டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான லியோ படத்தில் திரிஷா நடித்திருந்தார். இதில் பார்த்திபன் என்ற கேரக்டரில் நடித்த விஜய்க்கு மனைவியாக, 2 வளர்ந்த பிள்ளைகளுக்கு தாயாக திரிஷா நடித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதிலும் அந்த உதட்டு முத்தக்காட்சியில் விஜய் உடன் நடித்தது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். இதற்கிடையே மன்சூர் அலிகான் போட்ட ஒரு வீடியோ பதிவுக்கு, திரிஷா கண்டனம் தெரிவித்து பதிவு போட அது பெரிய அளவில் வைரலானது. ஒரு கட்டத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதால் அந்த பிரச்னைக்கு முடிவுக்கு வந்தது.

இந்த சூழலில் இப்போது சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த வாரத்தில் பெய்த இந்த பலத்த மழையால் சென்னை மாநகரம் கடுமையான மழைவெள்ளத்தில் சிக்கியுள்ளது. மக்களுக்கு பலவிதங்களில் பலரும் உதவி வருகின்றனர். மின்சாரம் இல்லாமல், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நெருக்கடியான நிலையில் இதுவரை மக்கள் பாதித்தது குறித்து திரிஷா எந்தவிதமான பதிவும் போடாத நிலையில் இப்போது நாய்கள் குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்சில் பதிவிட்டுள்ளார். அதில் மழைவெள்ளத்தில் சிக்கி நாய்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன, என்ற விதத்தில் நாய்களுக்கு பரிதாபப்படும் ஒரு இரக்க மனம் கொண்டவராக திரிஷா இந்த பதிவை செய்திருக்கிறார்.

சமீபத்திய சூறாவளி எங்கள் சரணாலயத்தில் பேரழிவை ஏற்படுத்தியது என்ற பொருளில் ஆங்கிலத்தில் ஒரு வாசகத்தை எழுதி, நாய்கள் உள்ள வீடியோ ஒன்றை ரீல்ஸ் ஆக ஷேர் செய்துள்ளார். அது புளுகிராஸ் மூலமாக உதவி கேட்டு வந்த ரீல்ஸ் தான் என்றாலும், அதை மதித்து, ஷேர் செய்த திரிஷா, தன் ரசிகர்களுக்காக, தன்னை வாழ செய்த மக்களுக்காக, மழை வெள்ளத்தில் தவிக்கும் அவர்களுக்காக ஒரு பதிவை பதிவிடாமல் இது ரொம்ப முக்கியம்தானா என, ரசிகர்கள் ட்ரோல் செய்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்