எப்போதுமே சர்ச்சையாக பேசி விமர்சனத்தில் சிக்குவதுதான் நடிகை வனிதா விஜயகுமாரின் வழக்கமாக இருந்து வருகிறது. அதனால்தான் இவர் எந்த விஷயம் பற்றி பேசினாலும் அது இணையத்திலும் பெரிய அளவில் வைரலாகி விடுகிறது. சமீபத்தில், சிவராத்திரி பாடல் விவகாரத்தில் திடீரென இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ நான் என்று கூறி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜயகுமார் – மஞ்சுளா என்ற நட்சத்திர தம்பதியின் மகளாக இருந்தும் சினிமாவில் முன்னணி நாயகியாக வனிதா விஜயகுமார் வரவேற்பை பெறமுடியவில்லை. இதற்கிடையே 3 திருமணங்கள் செய்து 3 கணவர்களையும் அடுத்தடுத்து விவாகரத்தும் செய்துவிட்டார் வனிதா விஜயகுமார். மேலும் ஒரு கட்டத்தில் தனது அப்பா விஜயகுமாருடன், மகள் வனிதா போட்ட குடும்ப சண்டையும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
இப்போது தனது மகள் ஜோவிகாவுடன் இணைந்து மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை வனிதா விஜயகுமார் டைரக்ட் செய்திருந்தார். ஜோவிகா இந்த படத்தில் முதன் முறையாக தயாரிப்பாளராகி இருந்தார். வனிதாவும் இந்த படத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்து அவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்திருந்தார்.
அடல்ட் கண்ட்ன்ட் நிறைந்த இந்த படம் அந்த மாதிரி படமாக இருந்ததால், குடும்பத்துடன் யாரும் ரசித்து பார்க்க முடியாத ஒரு படமாக தோல்வியை சந்தித்தது. ஆபாசம் நிறைந்த காட்சிகளும் வசனங்களும் படத்தில் இருந்ததால் படம் பார்த்த பலரும், இப்படி ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்கவே முடியாது என்றும் விமர்சனம் செய்திருந்தனர். படமும் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், தனது மகள் ஜோவிகாவின் திருமணம் குறித்து பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறியதாவது, என் மகளுக்கு நான் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு சின்ன கண்டிஷன் உள்ளது. என்னுடைய மகளை திருமணம் செய்துக்கொள்ளும் நபர் 200 சவரன் நகையும் ஒரு இன்னோவா காரும் வாங்கித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடிகை வனிதா விஜயகுமார், சிரித்தபடியே ஜாலியாக இதை கூறியிருக்கிறார் என்றாலும் 200 பவுன் நகைகளும், இன்னோவா காரும் தனது மகளுக்கு கேட்கிறாரா, அல்லது தனக்கு கேட்கிறாரா என்று தெரியவில்லை என்று பலரும் கலாய்த்து கமெண்டுகளை செய்து வருகின்றனர். சமூக கருத்துகளை பேசி வரும் வனிதா விஜயகுமாரும் வரதட்சணை வாங்க ஆசைப்படுகிறாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.





