- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை கேட்டதும் பயம் வந்துவிட்டது... இரண்டரை மணி நேரமும் மாஸ் காட்ட முடியாது... சொல்கிறார்...

அந்த விஷயத்தை கேட்டதும் பயம் வந்துவிட்டது… இரண்டரை மணி நேரமும் மாஸ் காட்ட முடியாது… சொல்கிறார் குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்…

- Advertisement -

அஜித் குமார் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அட்லி திரைப்படம், நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. சொல்லப்போனால், சென்னையின் முக்கிய திரையரங்குகளில் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தொடர்ந்து முழு வீச்சில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், பிரசன்னா, பிரபு, யோகி பாபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வில்லனாக வருகிறார் அர்ஜுன் தாஸ். அவருக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடித்திருக்கிறார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தந்தைக்கு மகனுக்குமான பாசத்தை இந்த திரைப்படம் கூறும் என்று ஏற்கனவே ஆதிக் கூறி இருந்தார். அதை டிரைலரிலும் அவர் காட்டி இருந்தார். இந்த நிலையில் படம் குறித்த பல்வேறு தகவல்களை அவர் அளித்திருக்கிறார். அதில்,

டீசர் வெளியான உடனேயே அனைவரும் இந்த திரைப்படம் மாஸாக இருக்கும் என்று கூறிய போது எனக்கு பயம் வந்துவிட்டது. இரண்டரை மணி நேரமும் நாம் மாஸ் காட்சிகளை கொடுக்க முடியாது. இதன் காரணமாகவே, படத்தின் முன்னோட்டம் ஆடியன்ஸ்களை கவரும் வகையில் ஒரு கலவையாக இருக்கட்டும் என்று எடிட்டரிடம் கூறினேன்.

நான் படத்தில் காட்டி இருக்கும் ஒவ்வொரு ரெஃபரன்ஸ்களும் நிச்சயம் பிறமொழி ஆடியன்களுக்கும் புரியும். இந்த திரைப்படத்தின் கதை அவர்களுக்கும் கனெக்ட் ஆகும். நாங்கள் எல்லா இடத்திலும் ரெஃபரன்ஸ் வைக்கவில்லை. தேவைப்பட்ட இடங்களில் மட்டுமே வைத்துள்ளோம். இந்த திரைப்படத்தின் டைட்டில்லை கொடுத்ததே அஜித்குமார்தான்.

இந்தத் திரைப்படம் மூன்று விதமான மக்களை குறிக்கும். அதற்கு இந்த டைட்டில் சரியாக இருக்கும் என்று எண்ணினோம் என்று தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லிக்கு தணிக்கை குழுவினர் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்