- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி ரிலீஸ் ஆனதும் நான் அஜித் சாருக்கு போன் செய்தேன்... அப்போது அவர்...

குட் பேட் அக்லி ரிலீஸ் ஆனதும் நான் அஜித் சாருக்கு போன் செய்தேன்… அப்போது அவர் என்ன கூறினார் தெரியுமா… ஆச்சரியம் அளித்த ஆதிக் ரவிச்சந்திரனின் பதில்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் டிராகனைத் தொடர்ந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது அஜித்குமாரின் குட் பேட் அக்லி. படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

படத்தில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை என்றாலும், அஜித்தின் பிரசன்ஸ் கச்சிதமாக வந்திருப்பதால் திரையரங்குகளில் விசில் பறக்கின்றன. குறிப்பாக ஆங்காங்கே ரெட்ரோ பாடலையும் பயன்படுத்தி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இது படத்தின் கொண்டாட்டத்திற்கு அடி நாதமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதுபோக, அஜித்தின் டான் கதையை கூறும் இடமும், கிளைமாக்ஸ் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக இடைவேளையின் போது விஜய்யின் ஐ அம் வெயிட்டிங் டயலாக்கை அஜித் குமார் கூறியது, தளபதி ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்தது. இப்படி குட் பேட் அக்லி, குட் ரிசல்ட் பெற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

படம் வெளியான மூன்று நாட்களிலேயே இது 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன், பிரியா வாரியர், அஜித்தின் மகனாக நடித்திருக்கும் கார்த்திகேயா தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

- Advertisement -

நிகழ்ச்சியில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், படம் ரிலீஸ் ஆனதும் ஏகே சாரிடம் செல்போனில் பேசினேன். அவர் ரேசில் பிஸியாக இருந்தார். தற்போது படம் பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது என்று கூறினார். இந்த வெற்றியை உங்கள் தலையில் ஏற்றாதீர்கள், தோல்வியை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள் என்று என்னிடம் கூறினார் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனரிடமே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர், எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த பட வாய்ப்பையும் அஜித் சார் எனக்கு கொடுத்தால், நான் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்த நபராக இருப்பேன் என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்