நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் இளைய திலகம் நடிகர் பிரபு. இவரது மனைவி பெயர் புனிதா. இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும் உள்ளனர். விக்ரம் பிரபு, கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவர் நடித்த இறுகப்பற்று படம், சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குநராக இருக்கிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது, அஜீத்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்துக்கு பிறகு, அவரது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார.
இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நட்பாகி, பின்பு காதலாக மாறி இருக்கிறது. இரு வீட்டார் சம்மதத்துடன் வரும் 15ம் தேதி, அவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சிவாஜி கணேசன் குடும்ப மரபுபடி சொந்தங்களுக்குள் திருமணம் செய்து வைப்பதுதான் வழக்கம். குடும்ப உறவுகள் நாளடைவில் விலகிவிடக் கூடாது என்ற நிலையில், சிவாஜி செய்த ஏற்பாடுதான் இது. அதைதான் அந்த குடும்பமும் பாரம்பரியாக கடைபிடித்து வருகிறது.
அதனடிப்படையில், பிரபுவின் தங்கை மகன் குணால் என்பவருக்கும், பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. குணால், அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்துள்ளார். சிவாஜி வீிட்டில் நடந்த இந்த திருமண விழாவில், அன்றைய முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
ஆனால் ஒரு கட்டத்தில் குணால், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்துவிட்டனர். விவகாரத்தும் பெற்றுவிட்டனர். அதன்பின், சென்னையில் மெல்ட் டெசர்ட் என்ற கேக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராம் நட்பு மூலம், ஆதிக் ரவிச்சந்திரன் உடன் பழக்கமாகி, அது திருமணம் வரை வந்திருக்கிறது. விரைவில் திருமண பந்தத்தில் இணைய போகும் மணமக்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.





