- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் பார்த்து சுதாரித்துக்கொண்ட இயக்குனர் நெல்சன் - ஜெயிலர் 2 படம் குறித்து என்ன...

கூலி படம் பார்த்து சுதாரித்துக்கொண்ட இயக்குனர் நெல்சன் – ஜெயிலர் 2 படம் குறித்து என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க…

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் டைரக்ட் செய்திருந்தார். ஏற்கனவே கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் ஆகிய படங்களை அவர் டைரக்ட் செய்திருந்தார். தொடர்ந்து நெல்சன் இயக்கிய 4வது படம் ஜெயிலர்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் உலகளவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி மிர்ணா மேனன் மற்றும் மலையாள நடிகர்கள் மோகன்லால் விநாயகன் கன்னட நடிகர் சிவராஜ் குமார் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படம் உலகளவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில் ஜெயிலர் 2 படம் உருவாகும் என்று அப்போதே அறிவிப்பு வெளியானது. பாட்ஷா படத்துக்கு பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய கம்பேக் தந்த படமாக இது இருந்தது. ஜெயிலர் படத்துக்கு பின் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் பெரிய அளவில் வசூலை எட்டவில்லை. ஆனால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான கூலி படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்த நிலையில் கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்தார். தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இணைந்து இருக்கிறார். மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இதில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் நெல்சன் ஜெயிலர் 2 படம் குறித்து கூறியதாவது, ஜெயிலர் படத்தைப் போலவே ஜெயிலர் 2 படமும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் இந்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நல்ல படமாக இருக்கும். முக்கியமாக இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப்பை ஏற்றி பேச விரும்பவில்லை.

ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும் என்று நெல்சன் கூறியிருக்கிறார். பொதுவாக முக்கிய படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பதால் அந்த படத்தின் தோல்விக்கு அதுவே காரணமாகிறது. கூலி படத்துக்கு இருந்த ஏகப்பட்ட எதிர்பார்ப்புதான் அந்த படத்தை பார்த்த பிறகு நெகட்டிவ் விமர்சனங்களாக மாறி ஆப்பு வைத்தது. அதனால் ஹைப் ஏற்ற வேண்டாம் என்று இயக்குனர் நெல்சன் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

சற்று முன்