- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாரான இயக்குனர். பிரபாஸ் சொன்ன பதில் இது தான். அப்போ...

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாரான இயக்குனர். பிரபாஸ் சொன்ன பதில் இது தான். அப்போ பார்ட் 2 இருக்கா இல்லையா?

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான “ஆதிபுருஷ்” திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் மத்தியில் ஒரு லாபகரமான கலெக்சனை அள்ளியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்து பலரும் பொம்மை திரைப்படம் என்று கேலி செய்யத்தொடங்கினார்கள்.

ஆதலால் இத்திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை மெருகேற்ற இத்திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள். அதன்படி கடந்த ஜூன் மாதம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றபோதும் வட மாநிலங்களில் ஓரளவு நல்ல வரவேற்பே இருந்தது.

- Advertisement -

“ஆதிபுருஷ்” திரைப்படத்தை ஓம் ராவ்த் என்பவர் இயக்கியிருந்தார். இதில் பிரபாஸிற்கு ஜோடியாக கிரீத்தி செனான் நடித்திருந்தார். மேலும் செய்ஃப் அலி கான் ராவணனாக நடித்திருந்தார். இவர்களுடன் சன்னி சிங், தேவ்தட்ட நாகே, சோனல் சௌகன் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

“ஆதிபுருஷ்” திரைப்படத்தை டி சீரீஸ், ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் “ஆதிபுருஷ்” திரைப்படம் தமிழ்நாட்டை, கேரளா போன்ற மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் ஓரளவு நல்ல கலெக்சனை அள்ளியுள்ளதாக வெளிவந்த தகவலை ஒட்டி, இத்திரைப்படத்தின் இயக்குனரான ஓம் ராவ்த், பிரபாஸிடம் சென்று, “ஆதிபுருஷ்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டம் இருப்பதாக கூறினாராம். ஆனால் பிரபாஸோ, தனக்கு இதில் விருப்பம் இல்லை என வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டாராம். இத்தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்