- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு தூண்டில் போட்ட ஷங்கரின் மகள்?.. காருக்குள் போட்ட செம ஆட்டம்.. அது நடந்துடும் போல

விஜய்க்கு தூண்டில் போட்ட ஷங்கரின் மகள்?.. காருக்குள் போட்ட செம ஆட்டம்.. அது நடந்துடும் போல

- Advertisement -

இயக்குநர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி அடிப்படையில் ஒரு மருத்துவர். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். நிஜத்தில் நன்றாக படித்திருந்தாலும் படத்தில் படிக்காத பெண்ணாக நடித்து அப்ளாஸை அள்ளினார். நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் அசத்தினார் அதிதி. அதேபோல் பாடல் பாடியும் தனது திறமையை நிரூபித்தார்.

விருமன் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்தார். ஆனால் விருமன் படத்தில் இருந்த அளவுக்கு மாவீரனில் அதிதி நடிப்பதற்கு பெரிதான ஸ்கோப் இல்லை. வழக்கமான ஹீரோயின் போல படத்தில் வந்து சென்றார். இருந்தாலும் மேக்கிங்காலும், கதையாலும் படம் தேறியதால் மாவீரன் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படி தான் நடித்த முதல் இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகியிருப்பதால் உற்சாகமாக இருக்கிறார் அதிதி.

- Advertisement -

இந்தச் சூழலில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமாரும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். அதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்தில் அதிதிதான் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

அதேபோல் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து அடுத்து இயக்கும் படத்திலும் அதிதியை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து அது உறுதியாகிவிட்டதாகவும் பேசப்படுகிறது. இப்படி கோலிவுட்டில் வளர்ந்துவரும் ஹீரோயினாக இருக்கிறார் அதிதி. அதேசமயம் அதிதி ஹீரோயினாக நடிப்பதில் ஷங்கருக்கு கொஞ்சம்தான் சம்மதம் என்றும் இன்னும் சில படங்களில் நடித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவருக்கு கண்டிஷன் போட்டிருப்பதாகவும் சில வாரங்களுக்கு முன்பு கோலிவுட்டில் தகவல் பரவியது.

- Advertisement -

இந்நிலையில் அதிதி ஷங்கரின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகியுள்ளது. வெளிநாட்டில் சுற்றுலா சென்றிருக்கும் அவர் ஒரு கார் பயணத்தின்போது, லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடிதான் பாடலுக்கு சீட்டில் அமர்ந்தபடியே செமத்தியான டான்ஸை ஆடியிருக்கிறார். எனர்ஜி குறையாமல் அவர் ஆடிய நடனத்துக்கு ரசிகர்கள் லைக்ஸை குவித்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயினாக கமிட்டாகிவரும் அதிதி ஷங்கர் அடுத்ததாக விஜய்யை டார்கெட் செய்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் இந்த வீடியோவை அவர் அப்லோட் செய்திருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஒருவேளை இன்னும் சில படங்கள் கழித்து விஜய்க்கு அதிதி ஹீரோயின் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- Advertisement -

சற்று முன்