- Advertisement -
Homeபொழுதுபோக்குபோட்டி உலகத்துல ஓடீட்டு இருக்கிறோம், சமுதாயத்தில் இந்த மாற்றம் கண்டிப்பாக வரணும் - ஆதங்கப்பட்டு பேசிய...

போட்டி உலகத்துல ஓடீட்டு இருக்கிறோம், சமுதாயத்தில் இந்த மாற்றம் கண்டிப்பாக வரணும் – ஆதங்கப்பட்டு பேசிய நடிகர் சமுத்திரக்கனி!

- Advertisement -

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருப்பவர் சமுத்திரக்கனி. ஆரம்பத்தில் இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். பிறகு விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து சசிக்குமார் இயக்கிய முதல் படம் சுப்ரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்தார். தமிழ் சினிமாவில் நாயகனாக வில்லனாக குணச்சித்திர வேடத்திலும் தொடர்ந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சமுத்திரக்கனி நிறைய படங்களில் நடிக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த படம் திரு மாணிக்கம். லாட்டரி சீட்டு விற்பனை கடை நடத்தும் சமுத்திரக்கனியிடம் லாட்டரி டிக்கெட் வாங்கும் முதியவர் பாரதிராஜா, பணத்தை தொலைத்து விட்டதால் அந்த லாட்டரி சீட்டை பிறகு வாங்கிக்கொள்வதாக சென்றுவிடுவார். அவரது வறுமையை பார்த்து சமுத்திரக்கனி வருத்தப்படுவார்.

பிறகு அந்த லாட்டரி சீட்டுக்கு ரூ. 1.5 கோடி பரிசு விழுந்துவிடும். அந்த லாட்டரி சீட்டை தர வேண்டாம் என சமுத்திரக்கனியின் குடும்பம் பலவிதங்களில் போராடியும், பாரதிராஜாவை தேடிச் சென்று பரிசுக்குரிய லாட்டரி சீட்டை அவரிடம் தருவார் சமுத்திரக்கனி. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இதுபோன்ற நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கும் சமுத்திரக்கனி, நல்ல சமுதாய சிந்தனையாளராக அவ்வப்போது பேசி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, என்னைக்கு நாம் இந்த போட்டி உலகத்திற்குள் ஓட ஆரம்பிச்சுட்டோமோ, இன்னொருத்தவரை பார்த்து நம்ம வாழ்க்கையை அமைச்சுக்கிட்டோமோ, இன்னொருத்தரோட தேவை இன்னொருத்தவர் பயன்படுத்தற பொருளை நாமளும் பயன்படுத்தணும் என்று நெனைச்சோமோ அப்பவே வாழ்க்கை மாறிடுச்சு.

தேவையில்லாத பொருட்களை எல்லாம் வாங்கி வாங்கி சேர்த்துட்டு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் கடன் வாங்கீட்டு திரியறோம். இது மாறணும். இது மாறி நம்ம இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்போது எல்லாம் நல்லவிதமாக மாறிவிடும் என்று நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்