- Advertisement -
Homeபொழுதுபோக்குபோதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா - முக்கிய நிபந்தனையுடன் ஜாமீன்...

போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா – முக்கிய நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

- Advertisement -

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளில் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. ஆனால் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று ஆளுங்கட்சி திமுக கோஷமிட்டு வருகிறது.

இந்நிலையில் மதுபான வகைகள் தரும் போதையை காட்டிலும் ராஜ போதை தரும் கொகைன் போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையை போலவே மற்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் விற்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எதிர்கட்சிகளும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில், கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 2 நாட்கள் கழித்து கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா இருவருமே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள். பல வெற்றிப் படங்களில் நடித்தவர்கள். இதில் நடிகர் ஸ்ரீகாந்த் நேரடியாக அவரே போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியதாகவும், நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாகவும் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சிறையில் இருந்த அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

அவர்களது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன்பு தினமும் நடிகர் ஸ்ரீகாந்தும் நடிகர் கிருஷ்ணாவும் நேரில் ஆஜராக வேண்டும். ரூபாய் 10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், ரூபாய் 10 ஆயிரத்துக்கான இரண்டு நபர் ஜாமினிலும் இருவரைம் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்