உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை அடுத்து நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. இந்த படத்தை எப்போது எடுத்து முடிப்பார் என, ரசிகர்கள் அவர் மீது கோபப்படும் அளவு 4 மாதங்களில் முடிக்க வேண்டிய ஷூட்டிங்கை 15 மாதங்கள் வரை நீட்டித்து விட்டார்.
எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த அஜீத்குமார், அந்த படம் ரிலீஸான பிறகு நடிகை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்தான் நடிக்க முதலில் திட்டமிட்டிருந்தார். இதற்காக அஜீத் குமாரிடம் ஏற்கனவே விக்னேஷ் சிவன் கதையும் சொல்லி இருந்தார். அவரும் ஓகே சொல்லி இருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்தை இயக்க வேண்டாம் என்று மறுத்த அஜீத்குமார் அவரை விலக்கி விட்டு, இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாய்ப்பளித்தார். இந்த விவகாரத்தில் நடிகர் அஜீத்குமார் மீது நடிகை நயன்தாரா பயங்கர கடுப்பானார், இனி அஜீத்துடன் நடிப்பதில்லை என்று முடிவு செய்தது என்பதெல்லாம் பழைய கதை.
இதற்கிடையே அஜீத்குமார் தானாக முன்வந்து கொடுத்த வாய்ப்பை, இயக்குனர் மகிழ் திருமேனி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டாரா என்பது வருகிற பிப்ரவரி 6ம் தேதி ரசிகர்களுக்கு தெரிந்து விடும். ஆனால் விடாமுயற்சி டிரெய்லர் பார்த்த ரசிகர்கள், ஆங்கில படம் போல செம மாஸா இருக்குது என்று பாராட்டி வருகின்றனர்.
பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான் விடாமுயற்சி படம் என்பது ஊரறிந்த விஷயம்தான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற மகிழ் திருமேனியும் கூட இதுகுறித்த கேள்விக்கு, விடாமுயற்சி கதை என்னுடையது அல்ல, என்று ஓபனாக கூறியிருந்தார். அதன்மூலம் இது ரீ மேக் கதை தான் என்பதும் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி, படத்தை கிண்டல் பண்ண வேண்டும் என்பதற்காகவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு வருகின்றனர். அப்படி வருகிற கூட்டத்தை அமைப்படுத்தி நீங்கள் உட்கார வைத்து விட்டால் ஜெயித்து விடுவீர்கள் என்று, இயக்குனர்களுக்கு அட்வைஸ் கூறியிருக்கிறார். இணையத்தில் இது வைரலாகி வருகிறது.





