- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ரத்னவேல் பாண்டியனுடன் இணையும் மாமன்னன்... இந்த முறை இருவரும் தொடும் ஜானரே வேறு...

மீண்டும் ரத்னவேல் பாண்டியனுடன் இணையும் மாமன்னன்… இந்த முறை இருவரும் தொடும் ஜானரே வேறு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களுக்கு, இங்கு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இதில் உதாரணத்திற்கு நடிகர் விஜய்யை கூறலாம். தளபதி திரைப்படம் வந்தால் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே அளவுக்கு கேரளாவிலும் கொண்டாட்டங்கள் களை கட்டும்.

இதே போல் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் வெளி மாநில ரசிகர்களுக்கு இந்த அளவு ஆதரவு இல்லை. மோகன்லால் இருந்து சிரஞ்சீவி, மம்முட்டி, சிவராஜ்குமார், மகேஷ் பாபு வரை எந்த ஒரு நட்சத்திர நடிகர்களுக்கும் பெரியளவு கொண்டாட்டங்கள் இங்கு இருந்ததில்லை.

- Advertisement -

நீண்ட காலமாக நீடித்த இந்த போக்கை, மலையாள நடிகர் பக்கத்பாஸில் உடைத்தெறிந்தார் என்றே கூறலாம். இயக்குனர் பாசிலின் மகனும், நடிகை நஸ்ரியாவின் கணவருமான அவர் திரையுலகில் மற்றுமொரு நடிப்பு அரக்கன். அவரது நடிப்பை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள், சமீபகாலமாக இணையத்தில் பகத் பற்றிய ஏதாவது ஒரு தகவலை பகிர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

தமிழில் வேலைக்காரன், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் வில்லனாக வந்து மிரட்டினார். சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரத்னவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் அவருக்கு கொடுக்க, அதனை பிசிறு தட்டாமல் செய்து முடித்தார் பகத்ஃபாஸில்.

- Advertisement -

மாமன்னனாக வடிவேல் நடித்தாலும், காட்சிக்கு காட்சி தான் வரும் ஒவ்வொரு சீன்களிலும் மற்ற அத்தனை நடிகர்களின் நடிப்பையும் ஓரம் கட்டி விட்டு ஸ்கோர் செய்திருந்தார் பகத் பாசில். அவரது நடிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்த ரசிகர்கள், ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை கொண்டாடி பல்வேறு வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறதாம். புது இயக்குனர் இதனை இயக்கப் போவதாகவும், அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் சீரியஸாக இல்லாமல், பயணத்தை மையமாகக் கொண்டு ரசிகர்களை என்டர்டைன் செய்யும் திரைப்படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்