- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரிந்த பிறகு அந்த ஒரு விஷயத்தில் போட்டி போடும் தனுஷ் - ஐஸ்வர்யா; இவர்களுக்குள் இப்படி...

பிரிந்த பிறகு அந்த ஒரு விஷயத்தில் போட்டி போடும் தனுஷ் – ஐஸ்வர்யா; இவர்களுக்குள் இப்படி ஒரு போட்டி வர அதுதான் காரணமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. இமயமலை செல்லும் போது பலமுறை ரஜினியுடன் செல்வது ஐஸ்வர்யா தான். அப்பா மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் எங்கப்பா ஒன்றும் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்தால் மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்திருக்க மாட்டார் என்று லால் பட விழாவில் கோபமாக பேசினார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன், இயக்குநர் செல்வராகவனின் தம்பியான நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இப்போது ஓரளவு வளர்ந்த பிள்ளைகளாக அவர்கள் காணப்படுகின்றனர். எப்போதும் தனது பேரன்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

- Advertisement -

நல்லவிதமாக சென்று கொண்டிருந்த தனுஷ், ஐஸ்வர்யா திருமண வாழ்க்கையில், திடீரென ஏற்பட்ட விபத்து போல, கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர். இது ரஜினி, கஸ்தூரிராஜா குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்கள் இந்த திடீர் தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இன்னும் விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்யவில்லை. அதனால் இருவருக்கும் இடையே உள்ள மனக்கசப்பு நீங்கிய பின், வாழ்வில் மீண்டும் இணைந்துவிடுவர் என்று நம்புகின்றனர். இதற்கிடையே தனுஷ் ஆண்ட்ரியாவை திருமணம் செய்ய இருக்கிறார் என்றெல்லாம் வதந்தி பரவி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கணவரை பிரிந்த சோகத்தில் அதை மறப்பதற்காக டைரக்‌ஷன் துறையில் இறங்கி விட்டார் ஐஸ்வர்யா. ஏற்கனவே 3, வை ராஜா வை படங்களை இயக்கியிருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் அந்த படங்கள் வெற்றிப் பெறவில்லை. எனினும் 3வது முயற்சியாக தன் தந்தை ரஜினி கேமியோ ரோலில் நடிக்க, லால் சலாம் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ஐஸ்வர்யா பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் ஒரு விஷயத்தில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதாவது தனுஷ் நடிக்கும் பட விழா, ஐஸ்வர்யா பங்கேற்கும் பட விழாவில் தவறாமல் தங்களது பிள்ளைகள் லிங்கா, யாத்ராவை அழைத்துச் சென்று அருகில் அமர வைத்துக்கொள்கின்றனர். சமீபத்தில் கேப்டன் மில்லர் படவிழாவில், தனுஷ் தன் பிள்ளைகளுடன் பங்கேற்றார். அதே போல், லால்சலாம் பட விழாவிலும், தன் பிள்ளைகளுடன் ஐஸ்வர்யா பங்கேற்றார். இது இருவருக்கும் ஒரு கடுமையான போட்டியாகவே இருந்து வருகிறது. தங்களை போலவே, தங்களது பிள்ளைகளும் இப்போது இருந்தே மீடியாக்களின் பார்வையில் இருந்து, பப்ளிசிட்டி உருவாக்கும் காரணமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்