- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை அனுஷ்காவை தொடர்ந்து மாமன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி… சமூக வலைதளங்களை விட்டு வெளியேற்றம்...

நடிகை அனுஷ்காவை தொடர்ந்து மாமன் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி… சமூக வலைதளங்களை விட்டு வெளியேற்றம் – என்ன காரணம் தெரியுமா?

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. நடிகர் விஷால் நடித்த ஆக்சன் என்ற படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகமானார். தொடர்ந்து ஜகமே தந்திரம் கார்கி கேப்டன் பொன்னியின் செல்வன் கட்டா குஸ்தி பொன் ஒன்று கண்டேன் மாமன் தக்லைஃப் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார்.

இதில் கார்கி பொன்னியின் செல்வன் கட்டா குஸ்தி மாமன் உள்ளிட்ட படங்கள் ஐஸ்வர்யா லட்சுமிக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் வரவேற்பையும் ரசிகர்களிடம் பெற்று தந்தன. ஒரு நல்ல நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றிருக்கிறார். உண்மையில் இவர் ஒரு டாக்டர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் கட்டாகுஸ்தி 2 படத்தில் நடித்து வருகிறார். நல்ல நடிப்பாற்றலும் அழகும் திறமையும் உள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களை விட்டு வெளியேறுவதாக ஐஸ்வர்யா லட்சுமி தற்போது கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, சமூக வலைத்தளம் என்னிடம் இருந்த நிஜ சிந்தனையை பறித்தது. சொற்கள் மற்றும் மொழியை பாதித்தது. எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியது. வாழ்க்கையில் மேலும் அர்த்தமுள்ள தொடர்புகளில் சினிமாவையும் உருவாக்குவேன் என்று நம்புகிறேன்.

- Advertisement -

நான் அர்த்தமுள்ள சினிமாவை உருவாக்க முடிந்தால் எனக்கு பழைய பாணியில் உங்களுடைய அன்பை கொடுங்கள் என்று அந்த பதிவில் ஐஸ்வர்யா லட்சுமி குறிப்பிட்டுள்ளார். நடிகை அனுஷ்கா சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் இடைவெளி எடுக்கிறேன் என்று நேற்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். ஏனெனில் காதி படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வியை தந்ததால் இப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்ததாக கூறி இருந்தார்.

ஆனால் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மொத்தமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் இன்றைய யுகத்தில் சமூக வலைதளங்களில் தொடர்பு இல்லாமல் சினிமாத்துறையில் உள்ள ஒருவரால் எவ்வளவு காலம் இருக்க முடியும் என்பதுதான் கேள்விக்குறி. அதே நேரத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் சில மாதங்கள் வலைதளங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் பிறகு மீண்டும் உள்ளே வந்து விடுவதும் வழக்கமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்