- Advertisement -
Homeபொழுதுபோக்கு29 ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு முடிவு தேவைதானா? சாயிரா பானு அறிவிப்பு குறித்து கேள்வி...

29 ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு முடிவு தேவைதானா? சாயிரா பானு அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பும் ஏஆர் ரகுமான் ரசிகர்கள் – மகன் அமீன் வெளியிட்ட உடனடி பதிவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியர் பிரிவு தொடர்ந்துக்கொண்டே இருப்பதால் இது விவாகரத்து சீசன் போல ரசிகர்களுக்கு மாறிவிட்டது. அடிக்கடி இப்படி நட்சத்திர தம்பதியரின் பிரிவு மற்றும் விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்து வருகின்றன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தனுஷ், ஜீவி பிரகாஷ்குமார் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி ஆகியோர் வரிசையில் இப்போது இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் – சாயிரா பானு பிரிவு அறிவிப்பு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அதுவும் ஏஆர் ரகுமான் போன்ற ஆஸ்கர் விருது பெற்ற உலக பிரபலத்தின் குடும்பத்தில் இப்படி ஒரு பிரச்னை அதிர்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

இரண்டு மகள்கள், ஒரு மகன் என வளர்ந்த பிள்ளைகள் உள்ள ஏஆர் ரகுமான்- சாயிரா பானு குடும்பத்தில் ஒரு மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இன்னும் இருவருக்கு திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். கடந்த 1995ம் ஆண்டில் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது இந்த அறிவிப்பு பலத்த அதிருப்தியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எங்களது திருமண உறவில் எமோஷனல் ஸ்ட்ரைன் எனப்படும் உணர்வு ரீதியான வலி ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒருவர் மீது ஒருவருக்கு ஆழமான அதிகமான அன்பு இருந்தாலும் பிரச்னைகளால் ஏற்பட்ட இடைவெளி இருந்தாலும் இப்போதைய சூழலில் அதை சரிசெய்ய முடியாது என்று சாயிரா பானு, பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தனது மனைவி சாயிரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு குறித்து ஏஆர் ரகுமான் எதுவும் விளக்கம் தராத நிலையில், அவர்களது மகன் அமீன் தனது எக்ஸ் பதிவில், இந்த நேரத்தில் எங்களது பிரைவசிக்கு மதிப்பளியுங்கள். புரிந்து கொண்டதற்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார்.

திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் சில ஆண்டுகளில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள், குடும்ப பிரச்னைகள், ஏற்ற தாழ்வுகள் வருவது சகஜம்தான். ஆனால் 29 ஆண்டுகள் வாழ்க்கைக்கு பிறகு 3 பிள்ளைகளுக்கு பெற்றோராக வாழ்ந்த பிறகு இப்போது கணவன் மனைவி பிரிவு அவசியம்தானா, இதை பகிரங்கமாக அறிவிக்காமல் இருவரும் தனித்து வாழ்ந்திருக்கலாமே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்