- Advertisement -
Homeபொழுதுபோக்குஏழையின் குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை... ஏ.கே.வை சீண்டிய போஸ் வெங்கட்...

ஏழையின் குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை… ஏ.கே.வை சீண்டிய போஸ் வெங்கட்…

- Advertisement -

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநகரமே உருக்குலைந்துள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, வரதராஜபுரம் இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளும் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

மழை பெய்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆழ்ந்துள்ளனர். முழுக்க முழுக்க ஏரி தண்ணீர் சூழ்ந்து இருப்பதாலும், ஏரி பகுதியில் வீடு கட்டி இருப்பதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வீட்டில் மாடியில் தங்கி இருக்கும் அவர்கள், அன்றாட தேவைகளான உணவு குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

உட்புற பகுதிகளில் உள்ள மக்களை முழுவதுமாக மீட்க முடியாத சூழ்நிலையில், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார். காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதாகவும், தங்களைக் காப்பாற்ற யாருமே வரவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

எங்குமே இணைய தொடர்பு கிடைக்காத சூழலில், மொட்டை மாடியில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் டவர் கிடைப்பதாக கூறி புகைப்படத்தை பதிவிட்டார். இது தொடர்ந்து அங்கு சென்ற மீட்பு படையினர் படகு மூலம் விஷ்ணு விஷாலை மீட்டனர். அப்போது அவருடன் பாலிவுட் நடிகர் அமீர் கானும் இருந்தார். தனது தாயின் சிகிச்சைக்காக சென்னை வந்திருக்கும் அவர், விஷ்ணு விஷால் வீட்டில் தங்கி இருந்தது அப்போதுதான் தெரியவந்தது.

- Advertisement -

இருவரும் தங்கள் குடும்பத்துடன் படகில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அவர்களுக்கு அஜித்குமார் உதவி கரம் நீட்டினார். தனியாக பேருந்து ஏற்பாடு செய்து, அமீர்கான் விஷ்ணு விஷால் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், விஷ்ணு வீட்டின் அருகே வசிக்கும் அக்கம் பக்கத்தினரை மீட்டு தனக்கு சொந்தமான இடத்தில் வரவழைத்தார். அவருடன் புகைப்படம் எடுத்த வீடியோவை விஷ்ணு வெளியிட்டார். அது இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் போஸ் வெங்கட் அஜித்குமாருக்கு ஒரு கேள்வி எழுப்பி உள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இங்கிருக்கும் வடநாட்டவரையும் காக்கும். ஆனால் உங்களை விரும்பும் டிக்கெட் எடுத்து உங்கள் படத்தை பார்க்கும் ஏழைக் குரல் உங்களுக்கு எப்போதும் கேட்க வாய்ப்பில்லை. ஒரு போர்ட் அவனுக்கும் விட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். போஸ் வெங்கட்டின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. அவருக்கு எதிராக அஜித் ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில், போஸ் கேட்டதில் என்ன தவறு என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்