- Advertisement -
Homeபொழுதுபோக்கு24 மணி நேரமும் வேலை, வரிசையில் நின்ற தயாரிப்பாளர்கள், நொந்துப்போன ஐஸ்வர்யா ராய், உலக அழகியை...

24 மணி நேரமும் வேலை, வரிசையில் நின்ற தயாரிப்பாளர்கள், நொந்துப்போன ஐஸ்வர்யா ராய், உலக அழகியை இப்படி டார்ச்சர் பண்ணிருக்காங்களே

- Advertisement -

1994 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் ஐஸ்வர்யா ராய். அதனை தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்து இந்திய இளைஞர்களை தனது அழகால் திண்டாடவைத்த ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கிய “இருவர்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஹிந்தியில் படு பிசியான நடிகையாக வலம் வந்தார் ஐஸ்வர்யா ராய். அழகுக்கு மறு பெயர் இவர்தான் என்பது போல் இந்திய சினிமா உலகமே இவர் பின்னால் சென்றது. ஹிந்தியில் இவருக்கென்று ஒரு வேற லெவல் மார்க்கெட் உருவானது.

எப்போதும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை தேர்ந்தெடுத்த பிறகுதான் கதாநாயகிக்கான தேடலில் இறங்குவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் அந்த வழக்கத்தையே மாற்றிக்காட்டினார். ஐஸ்வர்யா ராயிற்காகவே கதைகள் எழுதப்பட்டனவாம். ஐஸ்வர்யா ராயின் கால்ஷீட் கிடைத்தால் போதும், மற்ற நடிகர்களை அதன் பின் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற நிலை வந்ததாம்.

தனது கெரியரின் தொடக்கத்தில் ஹிந்தியில் பல திரைப்படங்களில் அவர் நடிக்க நேர்ந்தது. அதாவது ஒரு நாளுக்கு 6 படங்கள் வீதம் நடிக்க வேண்டிய சூழல் வந்ததாம். அந்தளவுக்கு பல தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து வைத்திருந்தாராம்.

24 மணி நேரமும் ஷூட்டிங் ஷூட்டிங் என்று இருந்தாராம் ஐஸ்வர்யா ராய். வீட்டிற்கே போக மாட்டாராம். ஒரு படப்பிடிப்பில் இருந்து இன்னொரு படப்பிடிப்பிற்குச் செல்லும் வழியில் காரிலேயே உறங்கிவிடுவாராம். அல்லது செல்லும் வழியில் உள்ள ஹோட்டலில் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டுச் செல்வாராம்.

அந்தளவுக்கு பிசியான நடிகையாக இருந்திருக்கிறார். அவருடன் இருந்த மருத்துவர்கள் பலரும் “இவ்வாறு தூக்கமில்லாமல் நடித்தால் உங்கள் உலக அழகி என்ற பட்டமே பயன்படாமல் போய்விடும். உங்கள் அழகே சீர்குழைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகுதான் செலக்டிவாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினாராம். இதனால் அவர் பல தயாரிப்பாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்துவிட்டதாம். “ஐஸ்வர்யா ராயிற்கு திமிரு பிடித்துவிட்டது” என்று கூட பேச்சுக்கள் அடிபட்டுவிட்டதாம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்