சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷிற்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு, திரை உலகைச் சேர்ந்த பலரும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, தனது நடிப்பில் பல்வேறு வித்தியாசங்களை காட்டிய தனுஷ் இன்று ஆலமரமாக பறந்து விரிந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றியமையாத முக்கிய நடிகராகவும் அவர் வலம் வருகிறார்.
இதேபோல் ஐஸ்வர்யாவும், திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது இயக்கத்தின் முதல் திரைப்படமாக 3 திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வந்தாலும், அதில் 3 திரைப்படம் நிச்சயமாக வேறுபடும். அந்த அளவுக்கு தனித்துவமான காட்சிகளை படத்தில் வைத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் அந்த நேரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், இப்போது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகின. இந்தப் படத்திற்குப் பிறகு, கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இது சுமாரான வரவேற்ப்பையே பெற்றது.
இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், தனது தந்தையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதன் நடுவே, தனுஷிற்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே திருமண உறவில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தனுசை பிரிந்த பிறகு, போயஸ் கார்டனில் உள்ள தனது தந்தையின் இல்லத்திலேயே ஐஸ்வர்யா இருந்தார். இந்த நிலையில் தனியாக செல்ல விருப்பப்பட்ட அவர், கடற்கரைக்கு எதிரே ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம். இதற்கு பெற்றோர் ரஜினிகாந்த் மற்றும் லதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீட்டிற்க்கான உள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் தனது மகன்களுடன் ஐஸ்வர்யா அந்த வீட்டிற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.





