- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் அடுத்த திரைப்படத்தை எடுக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இத்தனை பேர் இருக்கிறார்களா... யாரைத்தான் டிக் செய்யப்...

அஜித்தின் அடுத்த திரைப்படத்தை எடுக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இத்தனை பேர் இருக்கிறார்களா… யாரைத்தான் டிக் செய்யப் போகிறார் ஏகே…

- Advertisement -

அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார்.

அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வரும் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதேபோல் அஜித்குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும், ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் மிகவும் துள்ளலான அஜித்தை பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதில் பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திலும் அஜித் குமாருக்கு ஜோடியாக திரிஷா வருகிறார்.

இப்படி அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கும் சூழலில், தனது 64-வது திரைப்படத்திற்கான வேலைகளை மட்டும் இன்னும் தொடங்காமல் இருக்கிறார் அஜித்குமார். தற்போது அவர் கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காகவே அஜித்குமார் ரேசிங் என்னும் அவர் நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

அண்மையில் துபாயில் நடைபெற்ற போட்டியில் அவரது அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அப்போதே அவர், ஆறு மாதங்கள் கார் ரேசிங்கில் ஈடுபட்டு முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திலேயே படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அஜித்குமாரின் 64-வது படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஏற்கனவே கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இருந்தார். இதுபோக சிறுத்தை சிவா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோருக்கும் அஜித்தின் 64-வது திரைப்படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். அண்மையில், விஷ்ணுவர்தனும் அஜித்துடன் இணைய வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வந்தது. தற்போது கார்த்திக் சுப்பராஜும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

சற்று முன்