- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மனசுதான் சார் கடவுள்... ரெட்ரோ திரைப்படத்தின் லாபத்தில் அப்படி ஒரு விஷயத்தை செய்த சூர்யா......

அந்த மனசுதான் சார் கடவுள்… ரெட்ரோ திரைப்படத்தின் லாபத்தில் அப்படி ஒரு விஷயத்தை செய்த சூர்யா… கண்கலங்கிய ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர்களில் முக்கியமானவர் சூர்யா. நந்தா காக்க காக்க வாரணம் ஆயிரம் என அவரது திறமையான நடிப்புக்கு சான்றாக விளங்கிய பல திரைப்படங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சூர்யா அண்மைக்காலமாகவே வெற்றி திரைப்படங்களை கொடுப்பதில் தடுமாறி வந்தார்.

இதில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு திரைப்படமும் அவருக்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தது. ஆனால் இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால் அவை நேரடியாக திரையரங்குகளில் வெளியாகவில்லை. ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டதால் அந்த நேரத்தில் படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவில்லை.

- Advertisement -

இருப்பினும் இந்த திரைப்படங்கள் சூர்யாவுக்கு நல்ல பெயரையே பெற்றுக் கொடுத்தன. குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யா தேசிய விருதை வென்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

பிறகு கங்குவா திரைப்படத்திற்காக சிறுத்தை சிவா உடன் கைகோர்த்த சூர்யா, அதற்காகவே ஓராண்டுக்கு மேல் செலவிட்டார். ஆனால் அது சூர்யாவுக்கு படுதோல்வியை கொடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த ஒன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது. இருப்பினும் ரெட்ரோவை, கங்குவா திரைப்படம்போல் படுமோசம் என சித்தரிக்காமல் இருப்பதால் அது ரசிகர்களிடையே ஓரளவு ரீச் ஆகி வருகிறது.

சொல்லப்போனால் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ஒரே நாளில் 46 கோடி ரூபாய் வசூல் குவித்தது. இப்படியான சூழலில் நேற்று முன்தினம், ரெட்ரோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 104 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சக்சஸ் மீட்டிங்கில், ஊடகவியலாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நாயகன் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படத்தில் லாபத்தில் இருந்து பத்து கோடி ரூபாயை, தனது அகரம் கல்வி நிறுவனத்திற்கு சூர்யா வழங்கினார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வர, பலரும் சூர்யாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்