- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கொடுத்த அற்புத வாய்ப்பு, இனியாவது கொஞ்சம் யோசிப்பாரா அஜீத்குமார் - எதிர்பார்த்து காத்திருக்கும்...

நடிகர் விஜய் கொடுத்த அற்புத வாய்ப்பு, இனியாவது கொஞ்சம் யோசிப்பாரா அஜீத்குமார் – எதிர்பார்த்து காத்திருக்கும் அஜீத் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி, அவர்களுக்கு அடுத்தபடியாக ரஜினி – கமல், இப்போதைய காலகட்டத்தில் விஜய் – அஜீத் இப்படிதான் தமிழ் சினிமாவில் இரண்டு முக்கிய நடிகர்களை போட்டியாளர்களாக ரசிகர்களே உருவாக்கி விடுகின்றனர். இதை எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜீத் என யாருமே உருவாக்கவில்லை.

சமகாலத்தில் நடிக்க வந்த அவர்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. அப்போது இருவரது படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள் எனக்கு அவரை பிடிக்கும், இவரை பிடிக்கும் என அவர்களாகவே இரு தரப்பாக பிரிந்து நின்றனர். ஒரு கட்டத்தில் உன் நடிகர் உசத்தியா, என் நடிகர் உசத்தியா என்ற ரசிகர்களின் போட்டியில், நடிகர்களை போட்டியாளர்களாக மாற்றி விட்டனர்.

- Advertisement -

ஆனால் ரசிகர்களால் போட்டியாளர்களாக கருதப்பட்ட இந்த 3 தலைமுறை நடிகர்களுமே அவர்களுக்குள் எப்போதும் தங்களது படம் சார்ந்து போட்டியிட்டதோ, சண்டையிட்டதோ கிடையாது. ரஜினி படம் ஹிட் ஆனால் முதலில் பாராட்டுவது கமலாக தான் இருக்கும். அதே போல் கமல் படம் ஹிட் ஆனால் வாழ்த்து சொல்பவர் ரஜினியாக தான் இருக்கிறார். கமல் 50 நிகழ்ச்சியில் அவர்கள் நெகிழ்ந்து பேசிய சம்பவங்கள் அதை உணர்த்தும்.

நடிகர்கள் விஜய், அஜீத் போட்டியாளர்களாக கருதப்பட்ட இந்த சூழலில், அவர்களும் ஒருவரை ஒருவர் பொது இடங்களில் நண்பர்கள் என்றுதான் கூறிக்கொள்கின்றனர். இதுவரை பொதுவெளியில் அவர்கள் எப்போதுமே ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொண்டதும் கிடையாது. ஆனால் ரசிகர்கள்தான் முட்டி மோதிக்கொண்டு, சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

இத்தகைய ஒரு சூழலில், நம்பர் ஒன் பொசிஷனில் இருந்த நடிகர் விஜய், இன்னும் இரு ஆண்டுகளில் தமிழ் சினிமாவை விட்டு முற்றிலுமாக ஒதுங்கி இருக்கிறார். அவரது கவனம் முழுவதும் இனி தமிழக மக்களின் மீதுதான். வரும் 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, தமிழக முதல்வராக வெற்றி பெற வேண்டும் என்பதும், தனது வளர்ச்சிக்காக இத்தனை ஆண்டுகாலம் பாடுபட்ட ரசிகர்களை முக்கிய கட்சி பொறுப்புகளில், பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.

இந்நிலையில், தனிக்காட்டு ராஜாவாக மாறியுள்ள நடிகர் அஜீத்குமார் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நிறைய படங்களில் நடித்து, விஜய் இருந்த போது காட்டிய அலட்சியத்தை இனியும் காட்டாமல், தமிழ் சினிமாவில் பல சாதனைகளை புரிய வேண்டும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது நடிகர் விஜய் தந்துள்ள அற்புத வாய்ப்பு. ஏனெனில் விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இனி அதிகமாக அஜீத் பக்கம் வர வாய்ப்பிருப்பதால் அதை ஏகே நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்