- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்பத்தனமாக நடந்துக்கொண்ட அஜீத்குமார், கடுப்பான கேப்டன் பேமிலி - லேட்டஸ்ட்டா நடந்த விஷயம் இதுதான்

அல்பத்தனமாக நடந்துக்கொண்ட அஜீத்குமார், கடுப்பான கேப்டன் பேமிலி – லேட்டஸ்ட்டா நடந்த விஷயம் இதுதான்

- Advertisement -

கடந்த மூன்று மாதங்களாக நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜர்பைஜானில் இருந்தார். அதன்பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால், துபாயில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் நாட்களை கழித்தார். அங்கு புத்தாண்டு மற்றும் தங்களது மகள் பிறந்தநாளை கொண்டாடினர்.

சில தினங்களுக்கு முன்பே சென்னைக்கு, குடும்பத்துடன் வந்துவிட்டார். ஆனால் இதுவரை அவர் விஜயகாந்த் மறைவு குறித்து ஒரு இரங்கல் செய்தி வெளியிடவில்லை. அவரது நினைவிடத்துக்கு சென்றோ, அல்லது விஜயகாந்த் வீட்டுக்கு சென்றோ துக்கம் விசாரிக்கவில்லை. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நடிகர் விஜய், கேப்டன் இறந்த அன்றே இரவு 10 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேரில் வந்து அழுதபடி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். கூட்டத்தில் சிக்கி, நசுங்கிய நிலையில் அங்கிருந்து சென்றார். கூட்டத்தில் அவரது கார் மீது செருப்பு வீசிய சம்பவமும் வைரலானது.

இந்நிலையில் அஜீத்குமார் சென்னை திரும்பியும் இதுவரை விஜயகாந்த் வீட்டுக்கு சென்றோ, அல்லது நினைவிடத்துக்கோ செல்லாமல் இருக்கிறார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன் நடிகை மனோரமா மறைந்தபோது, அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது கூட்டத்தில் சிக்கிக் கொண்டாராம். அதில் இருந்து யார் இறந்தாலும் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வதில்லை என்பதை பாலிசியாக வைத்திருக்கிறார்.

விஜயகாந்த் போன்ற ஒரு சிறந்த மனிதருக்கு, அஞ்சலி செலுத்துவதன் மூலம் அஜீத்குமார் போன்றவர்களுக்குதான் பெருமையே தவிர, இவர் மரியாதை செய்யாததால் அவர் புகழ் சிறிதும் குறையப்போவது இல்லை. அவர் வாழும் காலத்திலேயே கருப்பு எம்ஜிஆர் என்று புகழப்பட்டவர். அப்படியே மக்கள் மனங்களிலும் வாழ்ந்தவர்.

இதற்கிடையே விஜயகாந்த் வீட்டுக்கு போன் செய்த அஜீத்குமார் தரப்பினர், ரசிகர்கள் கூட்டம் இருந்தால், அஜீத்குமாருக்கு பிடிக்காது. ரசிகர்களை பார்த்தாலே அவருக்கு அலர்ஜியாகி விடும். அதனால், இரவு 3 மணிக்கு வீட்டுக்கு வருகிறோம். அந்த நேரத்தில் வருவது உங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே, அப்போது அஜீத்குமார் வருவதற்கு உங்களுக்கு சம்மதம்தானே, என கேட்டிருக்கின்றனர். கடுப்பான கேப்டன் பேமிலி சார்ந்தவர்கள், சொல்கிறோம் என்று மட்டும் கூறி போனை வேகமாக கட் செய்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர், தேமுதிக தலைவர், சீனியர் நடிகர் இத்தனை பெருமைகளை கொண்ட விஜயகாந்த் மறைவுக்கு துக்கம் விசாரிக்க, இரவு 3 மணிக்கு ரகசியமாக செல்ல அப்பாயின்ட்மென்ட் கேட்பது அஜீத்குமாருக்கு அசிங்கமாக தோன்றவில்லையா என பலரும் திட்டி வருகின்றனர்.

சற்று முன்