- Advertisement -
Homeபொழுதுபோக்குலைகா நிறுவனத்தின் மீது அஜீத் கடுப்பு, பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் இல்லை, விரக்தியில் ஏகே...

லைகா நிறுவனத்தின் மீது அஜீத் கடுப்பு, பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் இல்லை, விரக்தியில் ஏகே ரசிகர்கள் – இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபர் 4ம் தேதி, லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் அஜீத்குமார் நடிப்பில் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் துவங்கியது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படத்தில் அஜீத்குமார், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்தனர். படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படத்தின் கலை இயக்குனர் மிலன் இறந்தது பெரிய அதிர்ச்சியை தந்தது.

எனினும் தொடர்ந்து அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்த நிலையில் மழை, புயல், குளிர் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அடிக்கடி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இப்படியே மாதக்கணக்கில் ஷூட்டிங் தடைபட்டு தடைபட்டு நடந்த நிலையில், ஒரு கட்டதில் 4 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங்கே நடக்கவில்லை.

- Advertisement -

பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட்பேட் அக்லி படப்பிடிப்பில் அஜீத்குமார் பங்கேற்றார். பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் ஒருவழியாக அஜர்பைஜானில் நடந்து முடிந்து அடுத்ததாக ஐதராபாத்திலும் சில வாரங்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு, நிறைவடைந்தது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

இந்நிலையில் நவம்பர் மாதம் திரிஷாவுடன் பங்கேற்கும் பாடல் காட்சி ஷூட்டிங்குக்கு அஜீத்குமார் கால்ஷீட் தந்திருந்த நிலையில், இப்போது டிசம்பருக்கு அதை மாற்றி 7 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார். அதனால் வருகிற 2025 ஜனவரி 14ம் தேதியில் விடாமுயற்சி வெளியாக வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

அதுமட்டுமின்றி, விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போக இதுவரை படக்குழு காரணமாக இருந்த நிலையில் இப்போது அஜீத்குமார் காரணமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் அஜீத்குமார் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

துபாயில் 2 வீடுகள் வாங்கியுள்ள நடிகர் அஜீத்குமார், லண்டனிலும் இடம் வாங்கி போட்டிருக்கிறார். லண்டனை தலைமையிடமாக கொண்ட லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், அஜீத்குமார் இடம் வாங்கிய விஷயத்தில் ஏதோ ராங்க் கமிட்மென்ட் தந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் தனது வெறுப்பை காட்டி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்