சினிமாவில் உள்ள பல நட்சத்திர நடிகர்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு அரசியலுக்கு செல்கின்றனர். அதுதான் வழக்கமாக நடக்கிறது. எம்ஜிஆர் சிவாஜி கணேசன் துவங்கி டி ராஜேந்தர் கே பாக்யராஜ் விஜயகாந்த் ராமராஜன் சரத்குமார் கருணாஸ் மன்சூர் அலிகான் கார்த்திக் தற்போதைய விஜய் வரை பெரும்பாலானவர்கள் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியல் களத்துக்கு சென்றவர்கள்.
ஆனால் நடிகர் அஜீத்குமார் மட்டும் இதில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர். அவர் சினிமாவை விட விளையாட்டுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார். கடந்தாண்டு முழுவதும் கார் ரேஸ்க்காகவே ஒதுக்கி விட்டார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக துபாயில் நடந்த கார் ரேஸில் அஜீத்குமார் கலந்துக்கொண்டார். துபாயில் அவருக்கு சொந்தமாக பங்களாவும் இருப்பதால் குடும்பத்துடன் அங்கேயே மாதக்கணக்கில் தங்கியும் விடுகிறார். இதற்கிடையே சமீபத்தில் தான் அஜீத்குமார் சென்னைக்கு திரும்பினார்.
துபாயில் கார் ரேஸில்அஜீத்குமார் கலந்துக்கொண்ட போது, ஓய்வு நேரத்தில் தனியாக அவருடன் காரில் பயணிக்க ஒரு நபருக்கு 3500 திராம் கட்டணம் நிர்ணயித்து அந்த கார் ரேஸ் நடத்தும் நிறுவனம் ரசிகர்களிடம் வசூலித்தது. இதற்காக அஜீத்குமார் ஓட்டும் காரில் ஒரு ரவுண்டுக்கு 1.5 நிமிடம் வீதம் 2 ரவுண்டுகள் என 3 நிமிடங்கள் அஜீத்குமாருடன் பயணிக்க ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டது.
அந்த அடிப்படையில் இதற்காக மொத்தம் 40 பேர் வரை 3500 திராம் கட்டணம் செலுத்திய நிலையில் 20 பேர் வரை அஜீத்குமாருடன் தனியாக காரில் அவர்கள் பயணித்தனர். ஆனால் மீதி 20 பேர் நேரமின்மை காரணமாக அஜீத்குமாருடன் பயணிக்கவில்லை. இதற்கிடையே அஜீத்குமாருடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளார்.
இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டுச் சென்ற அஜீத்குமார், அந்த 20 பேருடன் தனித்தனியாக 3 நிமிடங்கள் வீதம் பயணித்து காரில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்றால் அஜீத்குமாருடன் பயணித்த தங்களது வீடியோக்களை ரசிகர்கள் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம் என ரேஸ் நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது.





