- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் வழக்கமான பார்மூலாவை அடித்து நொறுக்கிய நடிகர் அஜீத் - ரசிகர்கள் பற்றி இவர்...

தமிழ் சினிமாவின் வழக்கமான பார்மூலாவை அடித்து நொறுக்கிய நடிகர் அஜீத் – ரசிகர்கள் பற்றி இவர் கவலைப்பட்ட மாதிரியே தெரியலையே

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு என்று அன்று முதல் இன்று வரை சில பார்மூலாக்கள் உண்டு. அது கருப்பு வெள்ளை படங்கள் காலத்திலும் இருந்தது. இப்போது, டிஜிட்டல் பட காலகட்டத்திலும் அது இருக்கவே செய்கிறது. அதாவது ஹீரோ என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும். கண்களுக்கு அழகாக, பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கவேண்டும் என்பது, தமிழ் சினிமாவில் எழுதப்படாத வரையறையாக இருக்கிறது.

அதனால் தான் எம்ஜிஆர் விக் இல்லாமல் ஒரு படத்திலும் நடிக்கவில்லை. 73 வயதுகளை கடந்த ரஜினி, ஜெயிலர் படத்தில் கெட்டப்பிலும், மேக்கப்பிலும், டிரஸ்சிலும் அவ்வளவு கெத்தை காட்டி இருக்கிறார். இயல்பிலேயே அழகான நிறமும், தோற்றமும் கொண்ட நடிகர் கமலும் கூட, தேவையான இடங்களில் படத்தில் காட்சிக்கேற்ப, தனது உடல் அழகை, முக அழகை மேக்கப் மூலம் மெருகேற்றிக் கொள்கிறார்.

ஆனால் நடிகர் அஜீத் குமார், தன்னுடைய தோற்றம் என்னவோ, அந்த கெட்டப்பில்தான் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதாவது வெள்ளை தலைமுடி, வெள்ளை தாடி என தனது வயது தந்த அடையாளங்களை மறைக்காமல், கேமரா முன்பு நிற்கிறார். இதே தோற்றத்தில் காதல் காட்சிகளில் நடிக்கிறார். கதாநாயகியுடன் டூயட் பாடுகிறார். இதை பெரும்பாலான ரசிகர்கள், கண்டுகொள்ளாமல் அப்படியே அவரை பார்த்து ரசித்து வருகின்றனர். அவர் நடித்து வெளியாகும் படங்களை காண, லட்சக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில், ரிலீஸ் நாட்களில் காத்திருக்கின்றனர்.

அஜீத் குமார் தலைக்கு டை அடிக்காமல், வெள்ளை தாடியுடன் நடிப்பதை அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினி, அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள் என பலரும் அதுபற்றி அஜீத்குமாரிடம் பேசவில்லையா, என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சம்பவம், சமீபத்தில் நடந்திருக்கிறது. வெளிநாட்டில் படப்பிடிப்பு. குறிப்பிட்ட இடத்தில் லோகேஷன் பார்த்து விட்டு இயக்குநர் வந்து விட்டார். பின்பு, அங்கிருந்து படப்பிடிப்பு குழுவினர் அனைவரும், படப்பிடிப்பு கருவிகளை மூட்டைகளாக சுமந்துகொண்டு அந்த லோகேஷனுக்கு நடந்துதான் செல்ல வேண்டும். அங்கு வாகனத்தில் செல்ல முடியாது.

அனைவரும் சிறிது தூரம் சிரமப்பட்டு நடந்த நிலையில், டென்சன் ஆன அஜீத், தலைக்கும், கழுத்துக்கும் இடையிலான தனது முகத்தை கை வைத்து காட்டி, படத்துக்கு வரும் ரசிகர்கள், இதை தான் பார்க்க போகிறார்கள். அப்புறம் எதற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்கள். இப்போதே, இந்த இடத்திலேயே காட்சியை எடுங்கள், என்று கூறிவிட்டாராம். அதனால்தான், ரசிகர்கள் பற்றி கவலைப்படாமல், அவர்களுக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில், தனது இயல்பான தோற்றத்திலயே அஜீத், தனது படங்களில் நடிப்பது தெளிவாகிறது.

சற்று முன்