- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா திரிஷாவுக்கு வந்த திடீர் சிக்கல், தமிழ் சினிமாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - இனி...

நயன்தாரா திரிஷாவுக்கு வந்த திடீர் சிக்கல், தமிழ் சினிமாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – இனி அந்த 2 பேரும்தான் அடுத்த நயன்தாரா, திரிஷாவா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நயன்தாராவும் திரிஷாவும் முன்னணி நடிகைகளாக இருந்து வருகின்றனர். 40 வயதுகளை கடந்த நடிகை நயன்தாரா 2 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டு, வாடகைத் தாய் மூலம் உயிர் உலக் என்ற 2 குழந்தைகளுக்கு வளர்ப்புத் தாயாக மாறினார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் கேட்ட நயன்தாரா, இப்போது மூக்குத்தி அம்மன் படத்தில் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டுள்ளார். ஆனால் படம் வெளியான பிறகு வரும் லாபத்தில் பிராபர்ட்டி ஷேர் கேட்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா போடும் பல கெடுபிடியான கண்டிசன்களுக்கு மத்தியில்தான் அவரை படத்தில் கமிட் செய்யவே முடிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா போலவே நடிகை திரிஷாவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். அதுவும் முன்னணி நாயகியாக விஜய் அஜீத்குமார் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடிகை திரிஷா நடித்த பிறகு அவரது மார்க்கெட் எகிறியது. இமேஜூம் அதிகரித்த நிலையில் லியோ விடாமுயற்சி தக்லைப் குட்பேட் அக்லி ஐடென்டி தெலுங்கில் விஸ்வம்பரா சூர்யா 45 உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரும் நயன்தாராவும்தான் முன்னணி நடிகைகளாக பல படங்களில் கமிட் செய்யப்பட்டனர்.

ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் அந்த நிலைமை தலைகீழாக இப்போது மாறியிருக்கிறது. டிராகன் படம் அபார வெற்றிக்கு பிறகு ஹயாடு லோஹர் நடிகையை பலரும் தங்களது படங்களில் நாயகியாக்க பேசி வருகின்றனர். நடிகர்கள் சிலம்பரசன் தனுஷ் போன்றவர்களின் படங்களில் நடிக்க நடிகை மமிதா பைஜூ கமிட் செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு மகளாக மமிதா பைஜூ நடிப்பதாக கூறப்படும் நிலையில் அடுத்து பிரதீப் ரங்கநாதன் தனுஷ் சிலம்பரசன் உள்ளிட்டோர் படங்களில் மமிதா பைஜூ நாயகியாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இனி தமிழ் சினிமாவில் அடுத்து முன்னணி நடிகைகளாக வலம் வரப் போவது ஹயாடு லோஹர் மற்றும் மமிதா பைஜூதான் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சற்று முன்