- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாருக்கு பத்ம பூஷன் வழங்கியது இதற்காக தானா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம் - அட இப்படி...

அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் வழங்கியது இதற்காக தானா? சர்ச்சையை கிளப்பிய பிரபலம் – அட இப்படி ஒரு பின்னணி இதுல இருக்குதா?

- Advertisement -

ஆண்டுதோறும் கலை அறிவியல் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது நடிகர் அஜீத்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை ஷோபனாவுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா துறையில் இதுவரை நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிவாஜிக்கு 1984ம் ஆண்டிலும், ரஜினிகாந்துக்கு 2000ம் ஆண்டிலும் கமலுக்கு 2014ம் ஆண்டிலும் இந்த விருது வழங்கப்பட்டது.

நடிகர் விஜயகாந்துக்கு அவரது மறைவுக்கு பின், கடந்த 2024ம் ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த விருதை பெற்றுக்கொண்டார். இப்போது நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியவர் என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜீத்குமார், நடிப்பில் பெரிதாக எதுவும் சாதித்ததாக தெரியவில்லை. விளையாட்டுத் துறையிலும் அவர் எதுவும் பெரிய அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமான பதக்கங்களை வாங்கவில்லை. அவர் மக்களுக்கு பெரிய அளவில் தொண்டு, உதவி செய்ததாகவும் தகவல்கள் இல்லை.

அப்படி இருக்கும் போது, இப்போது பத்ம பூஷன் விருதை வழங்கியதற்கான காரணம் குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி, அந்தணன் ஆகியோர் வீடியோ ஒன்றில் கூறியதாவது, சினிமாவில் விளையாட்டில் மக்கள் தொண்டில் அஜீத்குமார் பெயர் சொல்லும் அளவுக்கு எதையுமே இதுவரை செய்தது இல்லை. இந்த நேரத்தில் அவருக்கு விருது வழங்க அரசியல் பின்னணிதான் காரணமாக உள்ளது.

சினிமாவில் அஜீத்குமார்க்கு கடும் போட்டியாளராக இருந்தவர் விஜய். அவர் இப்போது அரசியலில் குதித்து விட்டார். வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதனால் அஜீத்தை தன்வசப்படுத்தவும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் ஓட்டுகளை குறிவைத்தும் அஜீத்குமாருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வழங்கியிருக்கின்றன. தேர்தல் பின்னணிதான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறியிருக்கின்றனர்.

சற்று முன்