- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கும், பிரபல தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து இருக்குதா - இத்தனை நாளா அவர்...

நடிகர் அஜீத்குமாருக்கும், பிரபல தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு பஞ்சாயத்து இருக்குதா – இத்தனை நாளா அவர் தயாரிப்புல அஜீத் நடிக்காத பின்னணி இதுதான்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். டாப் ஹீரோக்களில் ஒருவர். சினிமா சார்ந்த யாருமே அவருக்கு தெரியாத நிலையில், சினிமாவுக்குள் வந்து சுயம்புவாக முன்னணி நாயகராக மாறியவர். இன்று ரஜினி, கமல், விஜய் வரிசையில் டாப் ஹீரோவாக அஜீத் இருக்கிறார்.

விஜய், சூர்யா, கார்த்தி, பிரசாந்த், தனுஷ், பிரபு, கார்த்திக் என பலரும் சினிமா வாரிசுகளாக, அந்த அடையாளத்துடன்தான் சினிமாவுக்குள் வந்தனர். அதாவது, ஒரு நடிகரின் மகனாக, ஒரு இயக்குநரின் மகனாக தமிழ் சினிமாவுக்குள் வருவது எளிதானது. ஆனால், திறமை இருந்தால் மட்டுமே தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்.

அஜீத்குமார், இளம் வயது முதலே பைக் பிரியர். பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது அவரது மிகவும் பிடித்தமான விஷயம். ஒரு காலகட்டத்தில், பைக் ரேஸ்களிலும் ஆர்வமாக கலந்துக்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஒரு பைக் விபத்தில் அவரது முதுகு தண்டுவடத்தில் ஆபரேசன் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

அப்படி இருந்தும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே போன்ற படங்களில் நடித்தார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரால் நீண்ட நேரம் நிற்கவோ, அல்லது உட்கார்ந்து நடிக்கவோ முடியாது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் சிரமப்படுவார். அதற்காக தரையில் ஒரு படுக்கை வசதி செய்யப்பட்டு, கிடைக்கும் நேரத்தில் வந்து அந்த படுக்கையில் படுத்துக்கொள்வார். ஷாட் ரெடியானதும் மீண்டும் சென்று அந்த காட்சியில் நடித்துக் கொடுப்பார்.

இந்நிலையில், ராஜிவ் மேனன் இயக்கத்தில், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தில் நடிக்க அஜீத்குமார் ஒப்பந்தமானார். இந்த படத்தில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் என பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தனர். இதில் ஐஸ்வர்யா ராய், மும்பையில் இருந்து வந்து ஸ்டார் ஓட்டலில் தங்கி நடித்துக் கொடுத்தார்.

இந்த சூழலில், படப்பிடிப்பு இடைவேளையில் அடிக்கடி படுத்துக்கொள்ளும் அஜீத் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்கவே வேண்டாம் என மறுத்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. ஆனால், டைரக்டர் ராஜிவ் மேனன் அவர் நடித்தால் தான் கேரக்டர் நன்றாக இருக்கும் என அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார் ராஜிவ்மேனன். இதையறிந்த பிறகுதான் எஸ் தாணு தயாரிப்பில் நடிப்பதில்லை என்று திட்டவடிவமான முடிவை அஜீத் எடுத்ததாக, சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

சற்று முன்