- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் அந்த இயக்குனருடன் இணைகிறாரா அஜித்... பேச்சுவார்த்தையும் தொடங்கியாச்சாம்... வாயடைத்துப் போன ரசிகர்கள்...

மீண்டும் அந்த இயக்குனருடன் இணைகிறாரா அஜித்… பேச்சுவார்த்தையும் தொடங்கியாச்சாம்… வாயடைத்துப் போன ரசிகர்கள்…

- Advertisement -

அஜித் குமார் தற்போது ஒரே நேரத்தில் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது ஹைதராபாத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

- Advertisement -

படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. வில்லன் கும்பல்களால் கடத்தப்படும் தனது மனைவியை ஹீரோ காப்பாற்றும் கதை தான் விடா முயற்சி படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

- Advertisement -

இதில் அர்ஜுன் திரிஷா ஆரவ் ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அஜித்குமார் தற்போது குட் பேட் அக்னி திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது.

 

இந்த திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது முதலில் எந்த திரைப்படம் வரும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்திலிருந்து தொடர்ந்து போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது மௌனம் காத்து வருகிறது.

 

இதனால் இந்த ஆண்டு விடா முயற்சி திரைப்படம் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் பிரசாந்த் நீலுவுடன் இணைந்து பணியாற்றப் போவதாக தகவல் வெளியானது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.

 

தற்போது பிரசாந்த் நீல், தெலுங்கு இயக்குனர் ஜூனியர் என்டிஆர் உடன் படம் எடுத்து வருகிறார். இதன் பிறகு அஜித் உடனான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய இடைவேளையில் அவர் சிறுத்தை சிவா உடன் இணைய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அவருடன் இணைந்து வீரம் வேதாளம் விவேகம் விசுவாசம் என நான்கு திரைப்படங்களில் அஜித் குமார் நடித்தார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிவா உடனான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சன் பிக்சர்ஸ் அல்லது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் என இரண்டு நிறுவனங்களில் ஏதாவது ஒன்று தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்