- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சர்க்கஸில் நான் கலந்துக்கொள்ளவில்லை - அம்பானி வீட்டு திருமணம் குறித்து கடுமையாக விமர்சித்த பிரபல...

அந்த சர்க்கஸில் நான் கலந்துக்கொள்ளவில்லை – அம்பானி வீட்டு திருமணம் குறித்து கடுமையாக விமர்சித்த பிரபல வில்லன் நடிகரின் மகள்

- Advertisement -

இந்திய முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராகவும், உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவராகவும் இருக்கிற முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா நடந்து வருகிறது. இதில் இந்திய சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல நூற்றுக்கணக்கான விவிஐபிகள் பங்கேற்று மணமக்கள் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மாநில முதல்வர்கள், பாலிவுட் ஸ்டார் நட்சத்திரங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அனில்கபூர், அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீக்‌ஷித், ஆலியா பட், ஜாக்கி ஷெராப், சஞ்சய்தத், போனி கபூர், ரன்வீர் சிங் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

தமிழ் சினிமா துறை சார்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார். அவரது நடனமும் சமீபத்தில் வைரலானது. நயன்தாரா – விக்னேஷ் சிவன், அட்லி – பிரியா, ஜோதிகா – சூர்யா, மனைவியுடன் சச்சின் டெண்டுல்கர், மனைவி மற்றும் மகளுடன் மகேந்திர சிங் தோனி என ஏராளமான பிரபலங்கள் திருமண விழாவில் கலந்துக்கொண்டுள்ளனர்.

பாலிவுட்டில் சிறந்த இயக்குனராக, நடிகராக இருப்பவர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் வெளியான மகாராஜா படத்திலும், வில்லன் நடிப்பில் அசத்தியிருந்தார்.

இந்நிலையில், அனுராக் காஷ்யப் மகள் ஆலியா, முகேஷ் அம்பானி இல்ல திருமணவிழா குறித்து சர்ச்சையான சில கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து ஆலியா கூறியிருப்பதாவது, அம்பானி வீட்டு திருமணம் ஒரு திருமணமே கிடையாது. அது சர்க்கஸ் நிகழ்ச்சி போல ஆகிவிட்டது. என்னையும் அவர்களின் திருமண விழாவுக்கு அழைத்தார்கள். விளம்பரம் செய்வதற்காக தான் அழைக்கிறார்கள் என்று தெரியும். அதனால் நான் பங்கேற்க மறுத்துவிட்டேன்.

பணத்துக்காக ஒரு திருமண விழாவுக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது. பணக்காரர்கள் தங்களது வாழ்க்கையை மிகவும் கவர்ச்சிக்கரமானதாக காட்டிக் கொள்கின்றனர். எங்களிடமும் அதிக பணம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து என்ன செய்ய முடியும், என்று ரெட்டிட் என்ற இணையதளத்தில் அவர் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்