பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆன நிலையில் மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் அழகுக்கலை நிபுணர் கௌரி ஸ்ப்ராட் என்பவரை அமீர்கான் 3வது திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு முன்பு அவர் ரீனா தத்தா என்பவரையும் 2வது திரைப்பட இயக்குனர் கிரண் ராவ் என்பவரையும் திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி நடிகர் அமீர்கானின் மூன்றாவது திருமணம் குறித்து ஏற்கனவே சர்ச்சை எழுந்தது. 2 முன்னாள் மனைவிகள், பிள்ளைகளின் முன்னிலையில் இந்த திருமண ஒப்பந்தம் நடந்தது சர்ச்சையானது.
இந்நிலையில் அமீர்கானின் 3வது திருமணம் குறித்து அமைச்சர் நித்தேஷ் ராணே கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது இந்து சமூகம் அது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அமீர்கானின் இந்த மூன்றாவது திருமணத்தை ஏன் லவ் ஜிகாத் என்று பார்க்கக் கூடாது என்றும் பாஜக மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான நித்தேஷ் ராணே கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் அமைச்சர் சஞ்சய் சிர்சாத் தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அமைச்சர் நித்தேஷ் ராணே கருத்து ஒரு வகையில் சரியானது. நான் அவரது கருத்தை ஆதரிக்கிறேன். பொதுமக்கள் அமீர்கானை ஒரு சிறந்த நடிகராக பார்க்கிறார்கள். அவர் ஒரு பெரிய நட்சத்திரம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இந்த நட்சத்திரம் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல தற்போது மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களின் மூலம் மக்கள் அவரிடம் இருந்து என்ன கற்றுக் கொள்வார்கள்? மக்களுக்கு அவர் என்ன கற்றுத் தருகிறார்? அவர் வேண்டுமானால் லவ் ஜிகாத்தின் விளம்பர தூதராக மாறலாம்.
ஆனால் சாதாரண பொது மக்களின் இதயங்களில் அவரால் ஒருபோதும் வாழ முடியாது என்று அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 61 வயதில் 3வது திருமணம் செய்வது சினிமா நட்சத்திரங்களுக்கு மிக சாதாரணமாக உள்ள நிலையில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் அது மிகப்பெரிய ஒரு விவகாரமாக தான் பார்க்கப்படுகிறது.





