- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லா வேலையும் சரியாதான் நடக்குது, இதுல அரசியல் பண்ண முயற்சிக்க வேணாம் - பயங்கர டென்சனில்...

எல்லா வேலையும் சரியாதான் நடக்குது, இதுல அரசியல் பண்ண முயற்சிக்க வேணாம் – பயங்கர டென்சனில் விஷால் பதிவுக்கு பதிலடி தந்த அவர்….

- Advertisement -

மிக்ஜம் புயலால், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. வீட்டுக்குள் தண்ணீர் வந்தததால், மக்கள் அவதிப்படுகின்றனர். இன்னும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.

சில பகுதிகளில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன. போயஸ்கார்டனில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பெரிய மரங்கள் முறிந்துள்ளன. பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. சென்னையில் பல இடங்களில் மணிக்கணக்கில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர், நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், எட்டு வருஷங்களுக்கு முன் இதே போன்ற நிலை ஏற்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் சேமிப்பு திட்டம் சென்னையில் எப்போது எங்கு துவங்கப்பட்டது, எங்கு முடிந்தது என்று கூற தெரியவில்லை.

ஒரு நடிகனாக இல்லாமல், ஒரு ஓட்டுப்போட்ட குடிமகனாக இதை கேட்கிறேன். மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். சென்னை இப்படி வெள்ளத்தில் இருப்பது தர்மசங்கடமாக, கேவலமாக இருக்கிறது. எம்எல்ஏக்கள் இந்த நேரத்தில் அவர்கள் முகத்தை காட்டினால் நன்றாக இருக்கும் என்று வீடியோவில் கோபமாக கூறியிருந்தார்.

- Advertisement -

இதற்கு பதிலளித்துள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் உங்கள் வீட்டுக்கும் மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் செய்து வருகின்றனர். இதில் அரசியல் செய்ய முயலாமல், கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். அதை நிறைவேற்றி தருகிறோம் என, மேயர் பிரியா பதில் அளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்