- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட உண்மையிலயே எஸ்கேவுக்கு நேரம் சரியில்லதான் போங்க... இல்லன்னா இப்படி ஒரு முடிவை எடுப்பாரா என...

அட உண்மையிலயே எஸ்கேவுக்கு நேரம் சரியில்லதான் போங்க… இல்லன்னா இப்படி ஒரு முடிவை எடுப்பாரா என ரசிகர்கள் கமெண்ட்…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று சாதித்தவர்களில் மிக முக்கியமான நடிகர் சிவகார்த்திகேயன். சில தோல்வி படங்கள் அவர் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் யுக்தியை தெரிந்திருப்பதால் அவர் தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான நடிகராக வலம் வருகிறார்.

சீம ராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ எனத் தொடர் தோல்வி படங்களை கொடுத்திருந்த அவருக்கு, நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் முதல் முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து டான் திரைப்படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இந்த திரைப்படத்தை இயக்கினார். கல்லூரியில் தன்னை டான் என காட்டிக் கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டு வரும் சிவகார்த்திகேயன், வாழ்க்கையில் எப்படி சாதித்தார் என்பதை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தந்தை மகனுக்கு இடையேயான உறவையும் இந்த திரைப்படம் விளக்கியது. கடைசி அரை மணி நேரம் இந்த திரைப்படத்தின் எமோஷன் காட்சிகள் அந்த சமயத்தில் பேசப்பட்டதால், டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை அடுத்து இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

- Advertisement -

ஆனால் படம் ரிலீசான சில மாதங்களுக்கு பிறகு அந்த திரைப்படத்தை பலரும் கிண்டல் அடிக்க ஆரம்பித்தனர். டான் திரைப்படம் சரியான உப்புமா திரைப்படம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இது ஒரு பக்கம் இருக்க சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியை இயக்கப் போவதாக இருந்தது. லைக்கா நிறுவனம் அவரை புக் செய்த நிலையில், சம்பளம் அதிகமாக சிபி சக்கரவர்த்தி கேட்டதாகவும், இதனால் அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு பறிபோனது என்றும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் நானியுடன் சிவி சக்கரவர்த்தி சேர்ந்துள்ளார். இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ரஜினி படம் கைவிட்டுப் போனதும் முதலில் எஸ்கேவிடம் தான் அவர் சென்றிருக்கிறாராம். ஆனால் அடுத்தடுத்த படங்களில் எஸ்கே கமிட்டாகி இருந்ததால், அப்போது இணைய சாத்தியமில்லை என்று கூறி இருக்கிறார். இதனால் நானியுடன் இணைந்த சிபி சக்கரவர்த்தி, அடுத்ததாக எஸ்கே உடன் இணைய கதை எழுதி வருகிறாராம்.

- Advertisement -

சற்று முன்