புஷ்பா படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றவர் அல்லு அர்ஜூன். புஷ்பராஜ் என்ற கேரக்டரில் அவரது ரவுடித்தனமான நடிப்பை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். புஷ்பான்னா பிளவருன்னு நெனைச்சியா, புஷ்பான்னா பயர் என்று துப்பாக்கியால் சுட்டபடி அவர் பேசி செல்லும் காட்சிகள் வேற லெவலில் இருந்தது.
இந்த படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 25ம் தேதி புஷ்பா 2 படம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்திலும் ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ், சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகத்தை போலவே புஷ்பா 2ம் பாகமும் தரமான சம்பவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக மட்டுமே தனது படங்களில் நடித்து வருகிறார்.
அதனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் படத்தையே அட்லி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்காக இப்போதே ஸ்கிரிப்ட் எழுதும் பணியை துவங்கிவிட்டார் அட்லி. இந்த ஸ்கிரிப்ட் ரைட்டிங் வேலை 3 முதல் 4 மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் அதன்பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவை பொருத்த வரை படப்பிடிப்பு தளங்களில், மைக்கில் இயக்குநர்கள் கத்தி பேசுவது, ஸ்டார்ட், ஆக்சன் சொல்வது, சொதப்பும் உதவி இயக்குநர்களை, நடிகர்களை திட்டுவது போன்றவை மிக சகஜமாக நடக்கும். இதில் கேஎஸ் ரவிக்குமார், ஷங்கர், சேரன், அட்லி போன்றவர்கள் பெயர் பெற்றவர்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் கத்தி கத்தியே பழக்கப்பட்டவர்கள்.
ஆனால், அல்லு அர்ஜூனுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக, எந்தவிதமான கூச்சல், குழப்பம், சத்தம் இல்லாமல் படப்பிடிப்பை அமைதியாக நடத்த வேண்டும். மைக்கில் கத்துவது, மற்றவர்களை திட்டுவது போன்றவை அறவே அவருக்கு பிடிக்காதாம். அப்படி டைரக்டர் டென்சன் ஆகி விட்டால், ஒரு கி.மீ துாரமாக போய் ஓரமாக நின்று கத்திவிட்டு வந்து, பின் அமைதியாக ஷூட்டிங்கை நடத்துவதுதான் அவரது விதிமுறையாக உள்ளது. எப்படி அட்லி போன்ற மைக்செட்கார இயக்குநர், அல்லு அர்ஜூனை வைத்து சமாளிக்க போகிறார் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.





