ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் புஷ்பா மற்றும் புஷ்பா 2 மாஸ் ஹிட் படங்களை தொடர்ந்து தனது 22வது படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த சயன்டிபிக் படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்கிறார். இது அவர் இயக்கும் 6வது படமாகும். ஏற்கனவே தமிழில் 4 படங்களும் இந்தியில் ஒரு படமும் அவர் டைரக்ட் செய்திருக்கிறார்.
ராஜா ராணி தெறி மெர்சல் பிகில் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மாஸ் ஹிட் படங்களாக அட்லிக்கு சினிமாவில் பெரிய இமேஜை ஏற்படுத்தி தந்த நிலையில், தனது 22வது படத்தை இயக்கும் வாய்ப்பை, அல்லு அர்ஜூன் அட்லிக்கு தந்தார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் லுக் டெஸ்ட் ஷூட் இப்போது நடந்து வருகிறது.
இந்த படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ராஜமவுலியின் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ரூ. 30 கோடி சம்பளத்தில் இந்த படத்தில் அவர் நடிப்பதால் அந்த படம் முடியும் வரை வேறு படத்தில் கமிட் ஆக கூடாது என ராஜமவுலி ஒப்பந்தம் செய்த நிலையில், அவரால் அட்லி இயக்கும் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
அல்லு அர்ஜூன் இந்த படத்தில் முதலில் 2 ரோல்களில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அமெரிக்காவில் நடந்து வரும் லுக் டெஸ்ட் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது இதில் அல்லு அர்ஜூன் 3 விதமான ரோல்களில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. எனவே இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதற்கிடையே இந்த படத்தில் நாயகிகளான மிர்ணாள் தாகூர் மற்றும் ஜான்வி கபூர் என 2 நாயகிகள் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளனர். இருவருமே பாலிவுட்டில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நடிகைகளாக இருப்பதால் அல்லு அர்ஜூனுக்கு இவர்கள் ஜோடியாக நடிப்பது பெரிய வெற்றியை தரும். ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இப்போது அல்லு அர்ஜூன் 3 கேரக்டர்களில் நடிப்பதால் 3வது கதாநாயகியையும் அட்லி கமிட் செய்துவிட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் மிர்ணாள் தாகூர் ஜான்வி கபூர் ஆகிய நடிகைகளை தொடர்ந்து நடிகை அனன்யா பாண்டே என்பவரும் நடிக்க உள்ளார். இவரும் பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் நடிக்கும் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 3 நாயகிகள் ஜோடியா என ரசிகர்கள் அனல் பெருமூச்சு விடுகின்றனர்.





